Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரெயில்வேயில் வேலை; மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம்; மத்திய அரசு எச்சரிக்கை

         ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக இந்திய ரெயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது. இதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

             இதுபற்றி ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிலர் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி வேலை தேடும் இளைஞர்களிடம் பணமோசடியில் ஈடுபடுவது எங்களுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே, போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே துறைக்கான வேலைகள் அனைத்தும் ரெயில்வே ரெக்ரூட்மண்ட் போர்டு (RRBs), ரெயில்வே ரெக்ரூட்மண்ட் செல்கள் (RRCs), ரெயில்வே புரொடெக்சன் போர்ஸ் (RPF) ஆகியவற்றின் மூலம் மட்டுமே அறிவிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும். எனவே, இந்த மூன்றை தவிர்த்து வேறு எந்த பெயரிலாவது வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்தால் அதை பிராடு (Fraud) என அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ரெயி்ல்வேயை பொறுத்தவரை அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் நாட்டின் முன்னணி தேசிய மற்றும் உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக,  Employment News / Rozgar Samachar உள்ளிட்டவைகளில் வெளியிடப்படுகிறது. இதுதவிர, RRB மற்றும் RRC-யின் அதிகாரபூர்வ வெப்சைட்டிலும் அறிவிப்புகள் வெளியாகும்.

இன்றைய நிலவரத்தில், ரெயில்வே தேர்வு என்பது எந்தவித தலையீடும் இல்லாமல் நேர்மையாக நடக்கிறது. விடைத்தாள்கள் கம்ப்யூட்டர்கள் மூலம் திருத்தப்படுகிறது. தேர்வு கட்டணமாக ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனவே, யாருக்கும் எந்த பணத்தையும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு பணமோசடியிலிருந்து தப்பித்து கொள்ள வேண்டும்' என ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive