Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நியமன ஆணைக்கு காத்திருக்கும் உதவிப் பேராசிரியர்கள்

     அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்பணியிடங்களுக்காக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை கிடைக்காததால், செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.

       மாநிலத்திலுள்ள அரசுக் கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு, 2012ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் வெளியிடப்பட்டது. கணிதம், இயற்பியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு, புள்ளியியல், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.
உயர் கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் தனித் தனியாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்தாண்டு ஆக., மாதம் நேர்காணல் நடத்தப்பட்டு, தேர்வானவர்களின் பட்டியலானது, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், கடந்த ஏப்., மாதம் வெளியிடப்பட்டது. ஆனால், தேர்வானவர்களுக்கு இதுவரை நியமன உத்தரவு கிடைக்காததால் அவர்கள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர். தேர்வான ஒருவர் கூறுகையில், 'இதுவரை, பணி நியமன உத்தரவு கிடைக்காததால் எங்களை போன்றவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதை நம்பி, முன்னர் பணியாற்றிவந்த இடங்களில் பணியை ராஜினாமா செய்துவிட்டோம்.
தற்போது, பொருளாதார பிரச்னையில் சிக்கித் தவிக்கும் எங்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கி பணியில் சேர்க்க வேண்டும்' என்றார். உயர் கல்வித்துறை துணை செயலர் கோபால் கூறுகையில், ''நியமன ஆணை வழங்குவதற்கான செயல்பாட்டு பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்தவுடன் ஆணைகள் வழங்கப்படும்,'' என்றார்.





7 Comments:

  1. When will be get the appointment order any body knows tell me if the election is affect the appointment or not

    ReplyDelete
  2. Appointment order not possible as Court order on PhD eligibility.

    ReplyDelete
  3. 2012 ல் அறிவிக்கப்பட்டு இன்றுவரை2015 பணி நியமனம் இல்லையென்றால் அரசுக் கல்லூரிகளில் 2012முதல் படித்து வரும் மாணவர்களின் நிலையை இந்த அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  4. 2012 ல் அறிவிக்கப்பட்டு இன்றுவரை2015 பணி நியமனம் இல்லையென்றால் அரசுக் கல்லூரிகளில் 2012முதல் படித்து வரும் மாணவர்களின் நிலையை இந்த அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  5. NET SET Association members contact numbers please?

    ReplyDelete
  6. Do Any body know the status of net set case in court

    ReplyDelete
  7. Do Any body know the status of net set case in court

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive