Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு 20-ம் தேதி தொடங்குகிறது

      அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.இதைத் தொடர்ந்து, கலந்தாய்வு வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது.
 
            தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை,திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்பு (பிஏ.எல்எல்பி) உள்ளது. இதில் மொத்தம் 1,052 இடங்கள் இருக் கின்றன.நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) சட்டப்படிப்பில் சேர ஏறத்தாழ 5,500 பேர் விண்ணப்பித்தனர்.இந்த நிலையில், மாணவ-மாணவி களின் தரவரிசைப் பட்டியலை (ரேங்க் லிஸ்ட்) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலை நேற்று ஏராளமான மாணவ-மாணவிகளும் பெற்றோரும் ஆர்வத்தோடு பார்த் தனர்.தரவரிசைப் பட்டியலை தொடர்ந்து, பிடித்தமான கல்லூ ரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சட்டப் பல்கலைக் கழகத்தில் ஜூலை 20-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற இருக்கிறது.
கலந்தாய்வுக்கான அழைப் புக் கடிதம் மாணவர்களுக்கு உடனடியாக அனுப்பப்படும் என்று தமிழ்நாடு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவரும், சட்டப் பல்கலைக் கழகத்தின் பதிவாளருமான பேராசிரியர் எம்.எஸ்.சவுந்தரபாண் டியன் நேற்று தெரிவித்தார்.கட் ஆப் மதிப்பெண் பட்டியல்ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கட் ஆப் மதிப்பெண் பட்டியலை இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) பார்க்கலாம்.
கட் ஆப் மார்க் விவரம் வருமாறு:
ஓசி - 89.875
பிசி - 81.250
பிசி (முஸ்லிம்) - 77.000
எம்பிசி, டிஎன்சி - 79.875
எஸ்சி - 80.000
எஸ்சி (அருந்ததியர்) - 79.375
எஸ்டி - 65.875
ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரே கட் ஆப் மதிப்பெண் வரும் பட்சத்தில் யார் வயதில் மூத்தவரோ அவருக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை அளிக்கப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive