Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு விதிப்பு

       'தமிழகத்தில், 'அம்ருட்' திட்டத்திற்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள, 20 நகராட்சிகளும், விரிவான திட்ட அறிக்கையை, ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
          மத்திய அரசு, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும் நகராட்சிகளில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, 'அம்ருட்' திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை நினைவுகூரும் வகையில், 'அடல் மிஷன் பார் ரிஜுவனேஷன் அண்ட் அர்பன் டெவலப்மென்ட்' என்பதன் சுருக்கம். தமிழகத்தில், 'அம்ருட்' திட்டத்தின் கீழ், 20 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், குடிநீர் சப்ளை, மழை நீர் வடிகால்வாய் வசதி, பாதாள சாக்கடை வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து வசதி, ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள நகராட்சிகள், முதலில் தனி இணையதளம் துவக்க வேண்டும்.
நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை, கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ், கட்டட வரைபடம் ஒப்புதல் என அனைத்தும், இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இப்பணியை, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கையை, ஆறு மாதங்களுக்குள் தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இதில், என்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும், அதற்கான திட்ட மதிப்பீடு எவ்வளவு என்ற விவரம் இடம் பெற வேண்டும். திட்ட அறிக்கைக்கு, ஒப்புதல் கிடைத்ததும், திட்ட மொத்த மதிப்பீட்டில், 50 சதவீதத்தை, மத்திய அரசு வழங்கும்; மாநில அரசு, 50 சதவீதம் வழங்கும்.
திட்டத்தை, 2020க்குள் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில், 'அம்ருட்' திட்டத்திற்கு, தேர்வு செய்யப்பட்ட நகராட்சிகளில், திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து, அதிகாரிகள் ஆேலாசித்து வருகின்றனர்.


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை நினைவுகூரும் வகையில், 'அடல் மிஷன் பார் ரிஜுவனேஷன் அண்ட் அர்பன் டெவலப்மென்ட்' என்பதன் சுருக்கம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive