Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

          +2 முடித்தவுடன் இவர்கள்என்ன மாதிரியானபடிப்பைத்தேர்ந்தெடுக்கலாம் என்றுபார்க்கும்போது, எவர்கிரீன்படிப்புகளான மெடிக்கல்,இன்ஜினியரிங் தாண்டி,ஏராளமான வித்தியாசமானதேர்வுகள் உள்ளனஎன்றாலும், பாப்புலரானஇந்த இரண்டுவகைகளையும் நாம்போகிற போக்கில்விட்டுவிட முடியாது. எனவே,முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு,பிறகு மற்றவற்றைப்பட்டியலிடுவோம்.

இன்ஜினியரிங் படிப்பைப்பொறுத்தவரை,தமிழகத்தில் உள்ளபொறியியல் கல்லூரிகள்மற்றும் அவற்றில் உள்ளஇடங்களின்எண்ணிக்கையைப்பார்த்தால், விண்ணப்பித்தஅனைவருக்குமே சீட்கொடுத்தும், மீதம் காலியாகஇருக்கிறது என்பதுதான்உண்மை. எனவே,இன்ஜினியரிங் சீட்வாங்குவதைவிட,அப்படிப்பை வெற்றிகரமாகமுடிப்பதுதான் இன்றைக்குசிரமமான விஷயமாகஇருக்கிறது.எனவே,இன்ஜினியரிங் படிப்பைசிறப்பாக வெற்றிகரமாகமுடிக்கக்கூடிய சக்திஇருக்கிறதா என்பதைதெளிவாக ஆராய்ந்து,பிறகு முடிவெடுப்பதுசிறப்பாக இருக்கும்.
மெடிக்கல் படிப்பைபொறுத்தவரை,தமிழகத்தில் குறைந்தளவுகல்லூரிகளே இருப்பதால்,மிக அதிகளவு மதிப்பெண்வாங்கியவர்களுக்கானபடிப்பாக மட்டுமே அதுஇருந்து வருகிறது.எனினும், MBBS என்கிறஒரேயொரு படிப்பிற்குமட்டும், நாம் முயற்சிசெய்வதைத் தாண்டி,மருத்துவத்தில் உள்ள மற்றபடிப்புகளிலும் கவனம்செலுத்தினால், சீட்கிடைக்கும் வாய்ப்பு சற்றேஅதிகரிக்கும். MBBSபோலவே, அதேகாலஅளவில் உள்ள மாற்றுமருத்துவம் சார்ந்த சித்தா,ஆயுர்வேதா, ஓமியோபதி,யுனானி ஆகியவற்றின்மருத்துவப் பட்டப்படிப்புகளும் சமீபஆண்டுகளில் புகழ்பெற்றுவருகின்றன.தவிர, BDSஎனப்படும் பல் மருத்துவப்படிப்பு, MBBSசொல்லித்தரப்படுகிறகல்லூரிகளைவிட, சற்றுஅதிகமான கல்லூரிகளில்,தமிழகத்தில் உள்ளதால்,இவற்றில் சீட் கிடைக்கும்வாய்ப்பு சற்றே அதிகம்.கூடவே, B.Pharm எனப்படும்மருந்தியல், B.Sc(Nursing), B.P.T எனப்படும்பிசியோதெரபி, கண்மருத்துவம் சார்ந்தஆப்டோமெட்ரிஆகியவையும், மருத்துவம்சார்ந்த நாம் கவனிக்கவேண்டியபடிப்புகளாகும்.மருத்துவத்தில், மனிதர்களுக்கானமருத்துவம் தாண்டி,கால்நடைகளுக்கானமருத்துவம், காலம்காலமாகபுகழ்பெற்ற ஒன்றாகும். B.V.Sc. எனப்படும் வெர்ட்னரிசயின்ஸ் படிப்பு, சென்னைவேப்பேரியில் உள்ளகால்நடை மருத்துவக்கல்லூரியிலும், இந்தப்பல்கலையின் கீழ் இயங்கும்நாமக்கல் கல்லூரியிலும்சொல்லித் தரப்படுகிறது.
தவிர, B.F.Sc. எனப்படுகிறமீன்வளம் சார்ந்தவிஷயங்களை பட்டப்படிப்பாக சொல்லித்தருவதற்கென,தூத்துக்குடியில் அரசுமீன்வளக் கல்லூரி ஒன்றும்உள்ளது. இந்தக்கல்லூரியும், கால்நடைமருத்துவப் பல்கலையின்கீழ்தான் செயல்படுகிறது.இது, சமீப ஆண்டுகளில்வரவேற்பை பெற்றுவரும்இன்னொரு புதியபடிப்பாகும்.
வேளாண் துறை சார்ந்தபடிப்பான B.Sc. (Agriculture),எப்போதுமே வரவேற்புள்ளஒரு படிப்பாகும்.கோவையிலுள்ள வேளாண்பல்கலைக்கழகத்தின் கீழ்,கோவையில் மட்டுமல்லாது,திருச்சி, பெரியகுளம் எனபல்வேறு இடங்களில் உள்ளஉறுப்புக் கல்லூரிகளிலும்,இந்தப் படிப்பு சொல்லித்தரப்படுகிறது. வேளாண்கல்லூரிகளில், சமீபஆண்டுகளில் அதிகம்நாடப்படும் இன்னொருபடிப்பு, Horticulture எனப்படும்தோட்டக்கலை சார்ந்தபடிப்பாகும்.
தவிர, கோவை வேளாண்பல்கலையில், ஒருசிலசிறப்பு இன்ஜினியரிங்பட்டப் படிப்புகளும்சொல்லித் தரப்படுகின்றனஎன்பது பலர் அறியாதசெய்தி. B.Tech(BioTechnology), Food Process Engineering, Agricultural IT போன்ற இந்தஇன்ஜினியரிங்படிப்புகளுக்கு, நீங்கள்நேரடியாக கோவைவேளாண் பல்கலைக்கு,தனியாக ஒரு விண்ணப்பம்போட வேண்டும்.
ஒரு காலத்தில், அரசியலில்நுழைய வேண்டுமானால்,அதற்கு சட்டக் கல்லூரியில்சேர்வதானது, பாஸ்போர்ட்எடுப்பது போன்றது என்றகருத்து இருந்து வந்தது.ஆனால், இடையில்கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு,மீண்டும் சமீப ஆண்டுகளில்சட்டப் படிப்பிற்கான மவுசுகூடிவருகிறது. சென்னை,கோவை, திருச்சி, நெல்லை,மதுரை மற்றும்செங்கல்பட்டு ஆகியஇடங்களிலுள்ள அரசு சட்டக்கல்லூரிகளில், ஐந்தாண்டுசட்டப் படிப்பில் சேர +2வில்நீங்கள் எந்த குரூப்எடுத்திருந்தாலும்போதுமானது.
இப்படியான தொழிற்படிப்புகளுக்கானகல்லூரிகள் ஒருபுறம்இருந்தாலும், B.A., B.Sc., B.Com. போன்ற படிப்புகளைவழங்கும் கலை அறிவியல்கல்லூரிகளும்,நூற்றுக்கணக்கில்புகழ்பெற்றுவிளங்குகின்றன. எனினும்,இந்தக் கலை அறிவியல்கல்லூரிகள், ஒருகாலத்திலிருந்தவழக்கமானபடிப்புகளிலிருந்துமாறுபட்டு, இன்று நிறையபுதிய படிப்புகளைஅறிமுகப்படுத்தியுள்ளன.சொல்லப்போனால்,இன்ஜினியரிங்கல்லூரியிலுள்ளகம்ப்யூட்டர் சயின்ஸ்,பயோடெக்னாலஜிபோன்றவை, B.Sc.படிப்புகளாக, கலைஅறிவியல் கல்லூரிகளில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, சயின்ஸ்பாடங்களில்கூட, சிறப்புத்துறைகளாகமைக்ரோபயாலஜி,பயோகெமிஸ்ட்ரி, பிளான்ட்பயாலஜி என சிறப்புபட்டங்கள் தரப்படுகின்றன.சத்துணவு, இந்தியசுற்றுலா, ஹோம் சயின்ஸ்,உளவியல் என பெண்களைமையப்படுத்தி, நிறையசிறப்பு பட்டப் படிப்புகள்,குறிப்பாக, மகளிர்கல்லூரிகளில்சொல்லித்தரப்படுகின்றன.
கலை, அறிவியல்கல்லூரிகளில் மிகவும்பிரபலமான இன்னொருபடிப்பு B.Com. என்றாலும்,அதோடு சேர்ந்த படிக்கவேண்டிய இன்னும் சிலகோர்ஸ்களை நம்மாணவர்கள் கவனத்தில்கொள்ளாமல்விட்டுவிடுகின்றனர்.அதாவதாக, சார்ட்டர்டுஅக்கவுன்டன்ட் எனப்படும்CA, காஸ்ட் அக்கவுன்டன்ட்எனப்படும் ICWAI மற்றும்கம்பெனி செக்ரட்டரிஎனப்படும் ACS ஆகியமூன்றும்தான் அவை.
ஒருகாலத்தில், பட்டப்படிப்பை முடித்தப்பிறகுதான், இவற்றைமுயற்சி செய்யவே முடியும்.ஆனால் இன்று, +2 முடித்துபட்டப் படிப்பில்சேர்ந்தவுடனேயேஇவற்றுக்கானதொடக்கநிலைத்தேர்வுகளை எழுத முடியும்என்பதால், பட்டப் படிப்பைபடித்துக்கொண்டே ஒரேநேரத்தில், இந்தத்தேர்வுகளையும்எழுதுவதால், மூன்றாண்டுகாலம், விரயமாகாமல்பார்த்துக்கொள்ள முடியும்.
திரைப்படக் கல்லூரியில்சேர்ந்து படிப்பதை, ஒருகாலத்தில், பல வீடுகளில்அனுமதிக்கவே மாட்டார்கள்.ஆனால் இன்று, திரைப்படக்கல்லூரியில் சேர்ந்துபடிக்கும் அத்தனைப்படிப்புகளும்,தொலைக்காட்சித்துறைக்கும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதால், அந்த எதிர்ப்புநிலை மாறியுள்ளது.
சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில், ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு மற்றும்படத்தொகுப்பு போன்றபல்வேறு பிரிவுகளில்டிப்ளமோ படிப்பு சொல்லித்தரப்படுகிறது. அதேபோல்,சென்னை அடையாறில்உள்ள அரசு இசைக்கல்லூரியில், இசை மற்றும்நடனம் சார்ந்த பல்வேறுபிரிவுகளில் படிப்புகள்சொல்லித் தரப்படுவதோடு,இன்று பல்வேறு மாவட்டதலைநகரங்களிலும் அரசுஇசைக் கல்லூரிகள்உள்ளன.
உங்களின் ஓவியத்திறமையை மட்டுமேவைத்து பட்டப் படிப்பில்நுழையும் வாய்ப்பு உள்ளதுதெரியுமா? சென்னைஎழும்பூரிலுள்ளநூற்றாண்டு பழமைவாய்ந்த அரசு ஓவியநுண்கலைக்கல்லூரியிலும்,கும்பகோணத்திலுள்ளஇதே அரசுக் கல்லூரியிலும்BFA எனப்படும் Fine Arts பட்டப்படிப்பு, பல்வேறு சிறப்புபிரிவுகளில் சொல்லித்தரப்படுகிறது. இதில் சேர,உங்களது ஓவியத்திறமையைப்பரிசோதிக்கும்நுழைவுத்தேர்வு ஒன்றுநடத்தப்பட்டு, அதன்மூலம்நீங்கள் சேர்க்கப்படுவீர்கள்.இரண்டுமே அரசுக்கல்லூரிகள் என்பதால்,கல்விக் கட்டணமும் மிகக்குறைவுதான். இன்றுதென்னிந்திய திரையுலகில்புகழ்பெற்று விளங்கும்பல்வேறு ஆர்ட்டைரக்டர்களும்இக்கல்லூரிகளின்மாணவர்களே!
சமீப ஆண்டுகளில் பலரதுகவனத்தையும் ஈர்த்துவரும்படிப்புகளில், முக்கியமானஇன்னொரு படிப்பு பேஷன்டெக்னாலஜி. சென்னைதரமணியில் அமைந்துள்ளமத்திய அரசுக்கல்லூரியான NIFTஎனப்படும் நேஷனல்இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன்டெக்னாலஜி, அகில இந்தியஅளவில் புகழ்பெற்ற ஒருகல்வி நிறுவனமாகும்.இங்கு பல்வேறு பிரிவுகளில்ஆடை வடிவமைப்பு, ஆடைஉற்பத்தி போன்ற டிசைனிங்கோர்ஸ்கள், பட்டப்படிப்புகளாக சொல்லித்தரப்படுகின்றன.
சமையல் சார்ந்த படிப்பானகேட்டரிங் டெக்னாலஜி,ஹோட்டல் மேனேஜ்மென்ட்படிப்பும், எப்போதுமே நேரடிவேலை வாய்ப்பைஉருவாக்கித் தரும்படிப்புகளாகும். ஐந்துநட்சத்திர ஹோட்டல்கள்,கப்பல், விமானம் எனஉலகின் பல்வேறுநாடுகளுக்கும் பயணம்செய்து வேலைபார்க்கும்வாய்ப்பை கேட்டரிங்படிப்புகள் தருவதால்,அதுசார்ந்த ரசனைஉள்ளவர்கள் தாராளமாகதேர்ந்தெடுக்கலாம்.
அதேபோல், பத்திரிக்கை,தொலைக்காட்சி மற்றும்விளம்பரம் என,ஊடகத்துறை வளர்ச்சி,இன்று சிறப்பாகவேஇருந்து வருவதால், மீடியாபடிப்புகளான B.Sc. Visual Communication, Mass Communication, Public Relations, Journalism, Electronic Mediaபோன்ற பட்டப் படிப்புகளும்,நீங்கள் கவனம் செலுத்தவேண்டிய படிப்புகளாகும்.
எனவே, காலங்காலமாகதேர்ந்தெடுக்கப்படும்ஒரேமாதிரியானபடிப்புகளையேதேர்ந்தெடுக்காமல், உங்கள்ரசனை மற்றும்வேலைவாய்ப்பு ஆகியஇரண்டையும் கருத்தில்கொண்டு, வித்தியாசமானஒரு பட்டப் படிப்பைதேர்ந்தெடுத்து படிப்பதேசிறப்பாக அமையும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive