Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோடை காலத்தில் கார உணவு வேண்டாம்:குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் தேவை

             கோடை வெயில் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ற வகையில், பொதுமக்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
 
            தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர், குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; கார உணவு வகைகள், 'பாஸ்ட் புட்' ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அரசு குழந்தைகள் சிகிச்சை நிபுணர் நீலகண்டன் கூறியதாவது:
வெயில் தாக்கத்தால், குழந்தைகளின் உடலில், நீர் சத்து குறையும்; அதிகம் தண்ணீர் தர வேண்டும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை, தினமும், 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வைப்பது அவசியம்.
பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் தர வேண்டாம். வீட்டில் தயாரிக்கும் பழச்சாறு, மோர் மற்றும் இளநீர், தர்பூசணி தரலாம்; மாம்பழ ஜூஸ் தருவதை தவிர்க்க வேண்டும். மோர், ஜூஸ் கொடுத்தால் சளி பிடிக்கும் என்பது தவறு.
குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பவுடர் பூச வேண்டாம்; அது, வியர்வை சுரப்பிகளை அடைத்து, வேர்க்குருவை உருவாக்கும்; அது, அக்னி கட்டியாக மாறி, தொல்லை தர வாய்ப்பு உளது. பவுடக்கு பதிலாக, கற்றாழை, 'காலமின்' என்ற மண், திரவ 'பாரபின்' கலந்த, லோஷன் தடவலாம்; இது கடைகளில் கிடைக்கிறது.
குளிக்க பயன்படுத்தும் வழக்கமான சோப்பை விட, 'அசிடிக் சோப்' போடலாம். இது, தோல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
மசாலா உணவுகள், 'ஜங் புட், பாஸ்ட் புட்', அசைவ, கார உணவுகள் வேண்டாம்.
தினமும், இரண்டு முறை குளிக்க வைப்பது நல்லது; பருத்தி ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும் .
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும்; குழந்தைகளுக்கு பால் தேவை இந்த நேரத்தில் அதிகமாகும்; தாய்ப்பால் கொடுக்காதோர், டாக்டர்கள் பரிந்துரைத்தபடி இணை உணவுகள் தரலாம்.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக நேரம் துாங்கும். கோடை தாக்கத்தால், துாக்கம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் உடலில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் தேய்த்து சற்று நேரம் கழித்து குளிப்பதும், தோல் பிரச்னைகளை தவிர்க்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.- 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive