NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதால் பிரசவ கால இறப்பு குறைவு

                          விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதால் பிரசவ கால இறப்பு பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.
                         அவர் மேலும் கூறியது: பள்ளி மாணவ, மாணவியர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் சிறப்பு மருத்துவ முகாம்களை பள்ளிகளில் நடத்தி வருகிறனர்.  விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு வாரம் ஒருமுறை இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை உட்கொள்வதன் மூலம் மாணவ, மாணவியரின் ஞாபக சக்தி அதிகரிக்கிறப். சோம்பல் தன்மை குறையும்.
           ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர், துணை சுகாதார நிலைய அலுவலர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று  12 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். இதனால், மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படுவதை தடுப்பதுடன், தொற்று நோய் எளிதில்  ஏற்படாமலும் தடுக்க முடிகிறது.  கடந்த மார்ச் முதல் நவம்பர் வரை 78 ஆயிரத்து 689 மாணவ, மாணவிகளுக்கு 7 லட்சத்து 8 ஆயிரத்து 201 இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
                        மேலும், கர்ப்பிணி தாய்மார்களை ரத்த சோகை நோய்களில் இருந்து பாதுகாக்க இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதனால், பிரசவ காலத்தில் தாய்மார்களின் இருப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் இலவச நாப்கின் வழங்கப்படு வதால் சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது என்றார் அவர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive