Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's Special - Creative Questions Team

      வணக்கம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு புதுமையான சேவைகளை வழங்கி வரும் நமது பாடசாலை வலைதளம் மேலும் ஒரு புதிய முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள திறமையான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Creative Questions & Interior Questions க்கு பதிலளிக்கும் வகையில் இலவசமாக சிறப்பு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்க உள்ளது.


இக்குழுவில் இணைய ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. Click Here & Enter Your Details (Teachers Only)
  2. மேலே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 
  3. பிறகு பாடசாலை வலைதளத்திற்கென பிரத்யோகமாக தாங்களே தயார் செய்த வினாத்தாளை நமது இமெயில் ஐடிக்கு (Email ID: padasalai.net@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும்.
வினாத்தாள் அமைப்பு முறை
  1. வினாக்கள் முழுவதுமே பாடத்தின் உட்பகுதிகளிலிருந்து மட்டுமே கேட்கப்பட வேண்டும் (Creative Questions and Interior Questions only) . பாடப்புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள பயிற்சி வினாக்கள் கட்டாயமாக கேட்கப்படக் கூடாது.
  2. வினாத்தாளை தங்கள் பாடத்தில் உள்ள அலகு வாரியாக (Unit Wise) அல்லது தலைப்பு வாரியாக (Lesson Wise) தயாரித்து அனுப்பலாம். ஒரே பாடத்திற்கு பல ஆசிரியர்களும் வினாத்தாளை தயாரித்தும் வழங்கலாம்.
  3. வினாக்கள் அமைப்பானது 15 ஒரு மதிப்பெண் வினாக்களும், இதர 2 மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் என அனைத்தும் சேர்த்து மொத்த வினாத்தாள் ஏறத்தாழ 40 மதிப்பெண் முதல் 50 மதிப்பெண் வரை கேட்கப்பட்டிருக்கலாம் (வினா அமைப்பில் தேவையான மாற்றங்களை உரிய ஆசிரியர் செய்து கொள்ளலாம்)
  4. விடைகளை அதிகபட்சமாக 45 நிமிடத்தில் எழுதக்கூடிய அளவில் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.
  5. Public Exam நோக்கத்தில் இல்லாமல் NEET, JEE போன்ற பல்வேறு All India Level தேர்வுகளுக்கு 8ஆம் வகுப்பு முதலே தயாராகும் CBSE மாணவர்களைப் போன்று மிக கடினமாக, சிந்தித்து மட்டுமே விடையளிக்கக்கூடிய அளவில் Creative Questions and Interior Questions வினாக்களை அமைத்து வினாத்தாள் மிக நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  6. தமிழகம் முழுவதும் உள்ள மீத்திறன் மிகுந்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வினை எழுத இருப்பதால் வினாத்தாள் முழுவதுமே பாட உட்பகுதிகளிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படவேண்டும். 
  7. வினாத்தாளின் இறுதியில், தயாரித்த ஆசிரியரின் பெயர், படிப்பு, பதவி, பள்ளி, அலைபேசி எண் போன்ற விவரங்கள் வழங்கலாம். விருப்பமிருப்பின் ஆசிரியரின் Passport Size Photo இணைத்து அனுப்பலாம். (மாணவர்கள் வினாக்கள் குறித்த சந்தேங்களுக்கு தங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய நேரத்தை அவசியம் குறிப்பிடவும்).
  8. வினாத்தாள் Word Format  ல் அல்லது PDF Format ல் இருக்கலாம்.
  9. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இதர வகுப்புகளுக்கும் ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் வினாத்தாள் தயாரித்து வழங்கலாம்.
  10. நீங்கள் அனுப்பக்கூடிய வினாத்தாள் பாடசாலை வலைதளத்தில் சிறப்பு பயிற்சி பகுதியில் வெளியிடப்படும்.

மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. Click Here & Enter Your Details (Students Only)
  2. மேலே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 
  3. இங்கு வழங்கப்படும் சிறப்பு வினாத்தாள்களை பிரிண்ட் எடுத்து தங்கள் வீட்டிலேயே விடுமுறை நாட்களில் முழுமையான, முறையான தேர்வு எழுதி பார்க்கலாம்.
  4. விடைத்தாளை தங்கள் வகுப்பாசிரியரிடமோ அல்லது நட்பு ஆசிரியர்களிடமோ திருத்திக்கொள்ளலாம். ஆனால் நமது Centum Coaching குழுவைப்போன்று உரிய ஆசிரியர்களுக்கு விடைத்தாளை அனுப்பி வைக்க கூடாது. 
  5. வினாக்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சேவை நோக்கத்துடன் நம்முடன் இணைந்திருக்கும் ஆசிரியர்களை மிகப்பணிவுடன் தொடர்பு கொண்டு அலைபேசியில் கேட்கலாம்.

முக்கியக் குறிப்பு
  • இங்கு நமது  Creative Questions Team குழுவில் இணைந்திருக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டும் பாடசாலையால் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட "கேள்வி-பதில்” ஆன்ட்ராய்ட் ஆப் விரைவில் இலவசமாக வழங்கப்படும்.

நன்றி!
அன்புடன் - பாடசாலை.






3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive