NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

கடந்த ஜூன் மாதம் தேர்வெழுதிய இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகலை scan.tndge.in என்ற இணையதளத்தில் 16-ம் தேதி (இன்று) முதல் 20-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.அதைத்தொடர்ந்து, விரும்பினால் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு பிப்ரவரி 21 முதல் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.205. மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிநிறுவனத்தில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive