''நீட்
தேர்வில் பிளஸ் 1, பிளஸ் 2 பகுதியில் இருந்து அதிக வினாக்கள் இடம்
பெற்றிருந்தன,'' என,
தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.மதுரையில் 20 மையங்களில் 11800 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 459 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.மதுரையில் 20 மையங்களில் 11800 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 459 பேர் தேர்வுக்கு வரவில்லை.
எழுதிய மாணவர்கள் கூறியதாவது:ஜாய், மதுரை: உயிரியல் பாடங்களில் வினாக்கள் பெரும்பாலும் நேரடியாக கேட்கப்பட்டன. இயற்பியலில் 80 சதவீதம் கடின வினாக்களாக இடம் பெற்றன. பெரும்பாலும் 'அப்ளைடு' வகை வினாக்களாக இருந்தன. வேதியியல் பகுதி எழுதும் வகையில் இருந்தது. நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்றதால் முடிந்தளவு வினாக்களை எழுத முடிந்தது.
பாலாஜி, திண்டுக்கல்: பிளஸ் 1, பிளஸ் 2 பகுதியில் அதிகம் இடம் பெற்றன. இயற்பியல் கொஞ்சம் கடினமாக இருந்தது. வினாக்களையே புரிந்து கொள்ள முடியாத வகையில் இருந்தன. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து அதிகம் இடம் பெற்றன. பயிற்சி பெற்றதால் விடைகளை எழுத முடிந்தது. மைனஸ் மதிப்பெண் இருப்பதால் அதிக விடைகளை எழுத முடியவில்லை.
சுவேதா, சிவகங்கை: கிராமப்புற மாணவர்கள் எழுத முடியாத வகையில் வினாக்கள் இடம் பெற்றன. குழப்பமாக இருந்தன. குறிப்பாக வினாவிற்கு ஏற்ற விடையை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்டவை விடையாக இருக்குமோ என சந்தேகிக்கும் வகையில் வினாக்கள் இடம் பெற்றன.
ரம்யா, காளையார்கோவில்: நன்றாக படித்திருந்ததால் நல்ல மதிப்பெண் எடுக்கும் வகையில் வினாக்கள் இருந்தன. இவ்வாறு தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...