அனைத்து வகை பள்ளிகளையும் கண்காணிக்க பதவிகள் ஒருங்கிணைபட்டு சில மாறுதல்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..
மாவட்ட அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது...
*பதவிகள்:*
⚡1.முதன்மை கல்வி அலுவலர் CEO
⚡2.மாவட்ட கல்வி அலுவலர் DEO
⚡3.வட்டார கல்வி அலுவலர் BEO
*1.முதன்மை கல்வி அலுவலர் பணிகள்:*
அனைத்து வகை பள்ளிகளையும் (அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளி,சுயநிதிப்பள்ளிகள்) கண்காணித்தல்..
DEO BEO ஆகியோரை கண்காணித்தல்..
அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ஆண்டாய்வு செய்தல்..
பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்குதல்..
அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட அளவில் கிடைப்பதை உறுதி செய்தல்...
தனியார் பள்ளிகள் அங்கீகார பணிகளை மேற்கொள்ளுதல்...
*2.மாவட்ட கல்வி அலுவலர் பணிகள்:*
அனைத்து வகை பள்ளிகளையும் மேற்பார்வை செய்தல்
BEO அலுவலர்கள் பணிகளை மேற்பார்வையிடுதல்..
அனைத்து வகை உயர்நிலைப் பள்ளிகளை ஆண்டாய்வு செய்தல்...
மாவட்ட அளவில் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் சென்றடைவதை உறுதி செய்தல்...
உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணிகளை கண்காணித்து அறிவுரைகளை வழங்குதல்...
*3.வட்டார கல்வி அலுவலர் பணிகள்:*
உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடம் வட்டார கல்வி அலுவலர் பணியிடமாக மாற்றப்பட்டு உள்ளது..
அனைத்து வகை தொடக்க நடுநிலை பள்ளிகளை கண்காணித்து ஆண்டாய்வு செய்தல்..
தொடக்கநிலை நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிகளை கண்காணித்து அறிவுரைகளை வழங்குதல்..
அரசு நலத்திட்ட உதவிகளை முறையாக கிடைப்பதை உறுதி செய்தல்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...