பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தக் கால அவகாச நீட்டிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இணையதள சேவை முடக்கம் காரணமாக, 3 மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 3 மாவட்டங்களிலும் அமைதி திரும்பிய பின்னர் உரிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...