ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், 10
நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்என்று தமிழக பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று
காலை வெளியிடப்பட்டது. முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.
செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்தாண்டு 10-ம் வகுப்பில்
94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோல்வியடைந்தவர்கள் ஜூன் 28-ம் தேதி நடக்கும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி
பெறலாம். மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க தலைமையாசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள்
கேள்விகளுக்கு அவர் பதிலளித்த தாவது:
அரசுப்பள்ளிகளை மூடுவது தொடர்பாக தொடர்ந்து சந்தேகங்கள் எழுகின்றனவே?
அரசு தொடக்கப்பள்ளிகள் 29-ல் ஒரு மாணவர் கூட இல்லை. அவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மொத்தமாக கணக்கெடுத்ததில் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகவே பயின்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மூடப்படாது. இதுகுறித்து அப்பகுதிகளில் உள்ள பெற்றோர், பொதுமக்களின் கருத்துகள் அறியப்பட்டு அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்சேர்க்கையை அதிகப்படுத்த விளம்பரம் செய்யப்ப டுமா?
கூடுதல் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோருடன் இணைந்து கிராமங்கள்தோறும் ஊர்வலம், முரசு கொட்டுதல் மூலம் அரசின் சலுகைகள், புதிய பாடத்திட்டங்களை எடுத்துக்கூற அறிவுறுத்தப்பபட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால் அடுத்த நடவடிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும். புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும்? பாடத்திட்டத்தில் உள்ள பிழைகள் களையப்படுமா? புதிய பாடத்திட்டம் வெளியிடும்போது பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஜூன் மாதம் 1-ம் தேதி பிழைகள் இல்லாத பாடத்திட்டம் வெளியிடப்படும். ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஜூலை முதல் வாரம் பயிற்சி அளிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
கடந்த 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) எழுதியவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? 2013-ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் 93,000-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து, 2014, 17-ம் ஆண்டுகளிலும் தேர்வு நடந்துள்ளது. இவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்தும் அரசு விரைவில் முடிவெடுக்கும்.. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ந்து பொதுத்தேர்வு வருவதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறதே? மாணவர்கள் தொடர்நது தேர்வு எழுதிக் கொண்டிருந்தால்தான் அவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு தயாராக முடியும். தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பள்ளிகள் திறக்கப்படும்போது ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்குமா?
பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால், 10 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். சிறுபான்மை மொழி படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் இருந்தே ஆசிரியர்கள் தேர்வு செய்து நியமிக்கப்படுவார்கள். கிருஷ்ணகிரியில் தெலுங்கு படித்த 29 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் ஜூன் 28-ம் தேதி நடக்கும் தேர்வில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...