தபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்படவுள்ளன.
நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன.
நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளன.
இந்நிலையங்களில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து
வருகின்றனர். இப்பணியிடங்கள், நேர்முக தேர்வு அடிப்படையில், ஆண்டுதோறும்
நிரப்பப்படுவது வழக்கம். அவ்வகையில், 2018 - 19ம் ஆண்டுக்கான
காலிப்பணியிடங்கள் சமீபத்தில் கணக்கிடப்பட்டன. இதில், நாடு முழுவதும்,
2,286 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.
இப்பணியிடங்களுக்கு, தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக தபால்துறை அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்சம், 10ம்
வகுப்பு அல்லது இளநிலை பட்டதாரிகள் அனைவரும் ஆன்லைன் முறையில்
விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு, 18 - 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரும்புவோர்,
'http://www.appost.in/gdsonline/Home.aspx' எனும் இணையதள முகவரியில்,
வரும், 24ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணியாளர்கள் இல்லாததால்
கிராமப்புறங்களில் தபால் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதை
கருதி, பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 'கிராம தபால் ஊழியர்
பணிக்கான, அதிகபட்ச வயது வரம்பை, 30லிருந்து, 40 ஆக இந்திய தபால் துறை
உயர்த்தியுள்ளதால், அதிகம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...