இன்டர்நெட் சேவை துண்டிப்பால், வங்கி ஏ.டி.எம்., சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
*பாதிப்பா?*
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டக்கார்ர்களும், பொது மக்களும் மூன்று நாள்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டங்கள் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுகின்றன.
இதை தடுக்கும் நோக்கில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பல்வேறு சேவைகள் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் முடக்கம் காரணமாக வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க முடியவில்லை என்ற தகவல்களும் பரவுகின்றன.
*மறுப்பு*
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கி சேவைகள் வி.சாட் மற்றும் ஐ.எஸ்.டி.என்., எனும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் இன்டர்நெட் சேவை மூலம் செயல்படுகிறது. இதனால், வங்கி ஏ.டி.எம்.,கள் செயல்பாட்டுக்கும், இன்டர்நெட் துண்டிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஐ.எஸ்.டி.என்., சேவையில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே, வங்கியின் அனைத்து சேவைகளும் பாதிக்கும். பணம் இல்லை அல்லது இயந்திரத்தில் கோளாறு தவிர ஏ.டி.எம்.,கள் செயல்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, 3 மாவட்டங்களிலும் மொபைல் இன்டர்நெட் மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம்களும் வழக்கம் போல் செயல்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...