கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தமாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.
கர்நாடக தேர்தலையொட்டி இதன் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்பட்டது.இந்நிலையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் வரையிலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல்விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி முதல் மே 13-ம்தேதி வரை பெட்ரோல்,டீசல் விலையில் எந்தமாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்,டீசல்விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாககூறப்பட்டது.
இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சில தினங்களாக சில பைசாக்கள் மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மொத்தமாக 4 ரூபாய் உயர்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஈரான் மீது ஏற்பட்டிருக்கும் அழுத்தம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருக்கிறது.
மேலும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த இரண்டு காரணங்களாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சில அரசியல் காரணங்களாலும் விலை உயர்த்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...