மாவட்ட
அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப்
பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மாவட்டத்
தொடக்கக் கல்வி அலுவலரும், மெட்ரிக் பள்ளிகளை ஆய்வாளரும் கவனித்து
வந்தனர்.சமீபத்தில் அவை ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அலகாக மாற்றப்பட்டது.
அனைத்து வகை பள்ளிகளையும் வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) குறிப்பிட்ட வட்டாரங்களைச் சேர்த்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணிக்க உள்ளனர்.உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர். புதிய உத்தரவுப்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையும் கண்காணிக்க வேண்டும்.
அதன் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலரை விட பதவியில் உயர்ந்தவர் என்பதால்,அப்பள்ளிகளை ஆய்வு செய்ய முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் பள்ளிகள் எண்ணிக்கை 500 யை யொட்டி இருக்க வேண்டும். வட்டாரத்தையும் உடைக்க கூடாது என, தெரிவிக்கப்பட்டது. இதனால் 3 முதல் 5 வட்டாரங்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. சில வட்டாரங்களில் பள்ளிகள் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாக உள்ளதால், 500 என்ற எண்ணிக்கை அடிப்படையில் பிரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...