பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை போல
இந்தாண்டும் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஒவ்வொரு ஆண்டிலும், புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்தாண்டும், தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை முன்கூட்டியே பள்ளிகள் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.
தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை பத்திரிகையாளர்கள், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை இந்தாண்டு முதல் தேர்வுத்துறை அறிமுகப்படுத்த உள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...