தமிழ் வினாத்தாள் மூலம் நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு 196 சலுகை மதிப்பெண்கள் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் மருத்துவக்
கல்வி கனவாகவே ஆகிவிடும் அபாயம் உள்ளது என, "டெக்ஃபார் ஆல்' அறக்கட்டளையின்
நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளில் 68 வார்த்தைகள் தவறான உள்ளன. எனவே, குறிப்பிட்ட 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழில் தேர்வெழுதிய 24,500 மாணவர்களில் ஒருவரால் கூட இத்தேர்வில் தகுதி பெற முடியாது. அவர்களுக்கு மருத்துவக் க ல்வி கனவாகவே ஆகிவிடும்.
இது முழுக்க முழுக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தவறால் ஏற்பட்ட விளைவு. சிபிஎஸ்இயின் தவறுக்கு தமிழக மாணவர்கள் தண்டிக்கப்படக் கூடாது.
இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களிடம் எடுத்துரைத்து, ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் ஜி.பி.ராம்பிரகாஷ்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...