உங்க வீட்டு பக்கம் கொசு வராம இருக்க இந்த செடிகளை வளருங்க!

மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால்

நோய் மற்றும் இன்னும் பல பரவும் நோய்கள் மனித குலத்திற்கே திகிலூட்டுவதாக உள்ளது. இயற்கையாக சில தாவரங்கள் மூலமே கொசுக்களை விரட்டலாம்.
எலுமிச்சை புல்

இது ஹார்ஸ்மின்ட் எனவும் அழைக்கப்படுகிறது. மிகவும் வலுவான வாசனை உடையது. சிட்ரோனெல்லா புல் என்று அழைக்கப்படும் இது கொசுவை விரட்டவும் உபயோகப்படுகிறது.
துளசி

கொசுவின் லார்வா பருவத்திலேயே அதை கொள்ள வல்லது துளசி. துளசியின் நறுமணம் கொசுக்களை நம் வீட்டுக்குள் அண்ட விடாமல் செய்துவிடும்.
புதினா

பல வகை பூச்சிகளுக்கும் புதினாவின் வாசனை பிடிக்காது. இதை நம் வீட்டை சுற்றிலும் வளர்த்தால் கொசுவை நம் வீட்டுக்கு வரவழைக்காது. கொசு கடித்த இடத்தில் புதினா இலைச் சாற்றை தடவினால் நமைச்சல் இருக்காது.
சாமந்தி

கோடை காலங்களில் எங்கும் நிறைந்து காணப்படும் சாமந்தியை கொசுவை விரட்ட பயன்படுத்தலாம் என்பது நமக்கு புதியது. தோட்டக்காரர்கள் சிலவகை பூச்சிகளை அளிக்க பயன்படுத்தினாலும் சாமந்தி கொசுக்களை அழிப்பதிலும் வல்லது.

Share this

2 Responses to "உங்க வீட்டு பக்கம் கொசு வராம இருக்க இந்த செடிகளை வளருங்க!"

 1. பயனுள்ள தகவல்
  பாங்கான பதிவு
  பச்சைப் புல்லால்
  பசுமை புரட்சி
  பாரதத்தை பாரும்
  பின்பற்றட்டும்..
  ரங்கன் தமிழாசிரியர்..

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...