ஒன்பதாம் வகுப்புக்கு மறுதேர்வு நாளை மறுநாள் துவக்கம்

திருப்பூர்:ஒன்பது வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர் களுக்கு,
நாளை மறுதினம் (23ம் தேதி) துவங்கி மறு தேர்வு நடத்தப்பட உள்ளது.இம்மாதம், 11ம் தேதி, ஆறு முதல் ஒன் பது வகுப்புக்கான தேர்வு முடிவு, அந்தந்த பள்ளிகளில் வெளியிடப் பட்டது. அடுத்தடுத்த மூன்றாண்டுகள் தொடர்ந்து, பொதுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், 9ம் வகுப்பில், கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்த, ஐந்து சதவீத மாணவ, மாணவியர் 'பெயில்' ஆக்கப்பட்டனர்.ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு நாளை மறுதினம் (23 ம் தேதி) முதல், 26ம் தேதி வரை, அந்தந்த பள்ளிகளிலேயே மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.கல்வித்துறை அலு வலர்கள் கூறுகையில், '9ம் வகுப்பில் தோற்று விட்டோம் என மனசோர்வு அடைந்து, துவண்டு விடக் கூடாது என்பதற்காக, கல்வியாண்டு துவங்கும் முன்பே, தேர்வு வைக்கப்படுகிறது.இதில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், வரும் கல்வியாண்டிலேயே பிற மாணவர்களுடன் இணைந்து, பள்ளிக்கு செல்ல முடியும். எனவே, மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்,' என்றனர்.

Share this

1 Response to "ஒன்பதாம் வகுப்புக்கு மறுதேர்வு நாளை மறுநாள் துவக்கம்"

  1. In Dindigul District 6,7,8,9 all the students All Pass What about Thirupur? Different Results from different district authorities can framed?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...