மேஷம்
இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான
முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இனிமையான
வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
ரிஷபம்
இன்று கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில்
உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எந்த ஒரு காரியத்திலும் சரியான
முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை
ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுண்
மிதுனம்
இன்று சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து
திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். குழந்தைகளின் கல்வி தொடர்பான
விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது.
புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
கடகம்
இன்று, எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்தி சாதூரியத்தால்
எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை
கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை
தவிர்ப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி
இருக்கும். தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ராசியில் குருவுடனும், ராசிநாதன்
சூரியனுடனும் இணைந்து அமர்ந்து அருள் கொடுத்து கொண்டிருக்கிறார். எனவே
தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். புதிய
தொழில் தொடங்க ஆலோசனைகள் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
கன்னி
இன்று தொழிலை விரிவுபடுத்த ராஜாங்க ரீதியிலான ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.
அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும்.
செயல் திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
துலாம்
இன்று மேலிடத்திடம் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். இடமாற்றம்
சாத்தியமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பஸ்தானத்தை ராகு
பகவான் பார்ப்பதால் குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும்
கவனமாக கையாண்டால் அது தீரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
விருச்சிகம்
இன்று, சிக்கலான பிரச்சனைகளையும் வெற்றிகரமாக கையாளூம் திறன்
உங்களுக்கு வந்து சேரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறுவதற்கு இருந்து
வந்த தடைகள் அனைத்தும் விலகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை
ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், சிவப்பு
தனுசு
இன்று பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு
எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு
அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண்வாக்குவாதங்களை
தவிர்ப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள்
மகரம்
இன்று சமையல் செய்யும் போதும் வெளியில் செல்லும் போதும் கவனம் தேவை.
கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த
வேண்டியதிருக்கும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்களிடம்
அனுசரித்து போவது நன்மைதரும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், நீலம்
கும்பம்
இன்று எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி
காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மன மகிழ்ச்சியைத் தரும்.
நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக
முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பிரவுண்
மீனம்
இன்று சுப காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். வழக்கு
விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.
பொருளாதாரம் உயரும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...