திருக்குறள்:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
பழமொழி :
A hungry man is an angry man
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
பொன்மொழி:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
- பான்னி ப்ளேயர்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
ரஷ்யா
2.”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?
ஜப்பான்
ஜப்பான்
நீதிக்கதை :
தவளையும் சுண்டெலியும்
(The Mouse, the Frog, and the Eagle Story in Tamil)
(The Mouse, the Frog, and the Eagle Story in Tamil)
அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.
ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், "எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா?" என்று கேட்டது. தவளையும், "நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றது.
அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது.
அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.
அந்த சமயம்... தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.
இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.
நீதி: நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். இல்லையேல் தவளைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும்.
இன்றைய செய்தி துளிகள் :
1.உலகில் மாசடைந்த காற்றால் மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லி 3-வது இடம்
2.கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 1.05 லட்சம் கன அடி நீர் திறப்பு
3.ஏழுமலையான் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்: முதன் முறையாக 8 நாள்களுக்கு தரிசனம் ரத்து
4."நீட்' கருணை மதிப்பெண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாணவர் மேல்முறையீடு
5.விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் பிரிவில் செர்பியவீரர் ஜோகோவிச் பட்டம் வென்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...