வேளாங்கண்ணியில் நெகிழ்ச்சி சம்பவம் : பணி மாற்றத்தால் மாணவிகள் அதிர்ச்சி ஆசிரியையை கட்டிப்பிடித்து கதறல்
பணியிட மாற்றத்தை ரத்து செய்துவிட்டு பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கோரி ஆசிரியையை கட்டிப்பிடித்து மாணவிகள் கதறி அழுதனர்
திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பகவான் மாற்றப்பட்டபோது அவரை பள்ளியை விட்டு வெளியேற விடாமல் மாணவ, மாணவிகள் சுற்றி நின்று கதறி அழுதனர். அதேபோல் வேளாங்கண்ணி அருகிலும் ஒரு சம்பவம் நடந்தது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகில் உள்ள வடக்கு பொய்கை நல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்
பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி 2ம் வகுப்பு ஆசிரியை இசபெல்லாஜூலியை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது மாணவிகள், ஆசிரியர் குறைப்பு நடவடிக்கையால் எங்களின் படிப்பு பாதிக்கப்படும் என்றும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியையை மீண்டும் அதே பள்ளியில் பணியில் அமர்த்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்
பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை இசபெல்லாஜூலியை மாணவிகள் கட்டிப்பிடித்து கொண்டு கதறி அழுதனர்
மாணவிகளின் அன்பை உணர்ந்து ஆசிரியை இசபெல்லாஜூலிவும் அழுதார். அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை காரணம் காட்டி உபரி ஆசிரியர்களை அரசு இடமாற்றம் செய்கிறது
அதேநேரத்தில் அதே பள்ளியில் மறு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தால் மீண்டும் புதிதாக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவதில்லை
இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். எனவே மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை அரசு கைவிட ேவண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...