தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இரண்டு மாதங்களில், இலவச இணையதள,'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, 9.06 கோடி ரூபாய் மதிப்பில், இலவச இணையதள, வைபை வசதி ஏற்படுத்த, அரசுஒப்புதல் அளித்தது.இதில், முதல் கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில், 1.23 கோடி ரூபாய் செலவில், வைபை சேவை வசதி வழங்க,நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகளில், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:அரசு மேல்நிலை பள்ளிகளில், இலவச இணையதள, வைபை வசதி வழங்கும் திட்டத்தை, 2017ல், தமிழக அரசு, அறிவித்தது. தற்போது, இதற்கானநிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.முதல் கட்டமாக, 50 அரசு மேல்நிலைப் பள்ளி களில் சேவை வழங்க, 'டெண்டர் 'கோரப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில், பள்ளிகளுக்கு, இலவச, வைபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...