Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சர்வதேச இணைய ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது ஏன்?



இன்டர்நெட் தொடர்பான விப்போ என்ற சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் இன்டர்நெட்டிலுள்ள படைப்புகளை யாரும் அனுமதியின்றி எடுக்க முடியாதபடி தடை விதிக்கப்படும் என அந்த ஒப்பந்தம் தொடர்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விப்போ (World Intellectual Property Organisation) இன்டர்நெட் ஒப்பந்தங்கள் என்றழைக்கப்படும் சர்வதேச இன்டர்நெட் தொடர்பான விஷயங்களுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இதுவரை இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவந்தது..

விப்போ ஒப்பந்தமானது 1996இல் ஐநாவில் முடிவானது. 2012இல் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் காப்புரிமை சட்டமும் முன்னதாகவே திருத்தப்பட்டது.

விப்போ இன்டர்நெட் ஒப்பந்தத்தின்படி, இன்டர்நெட்டிலிருந்தோ அல்லது மற்ற டிஜிட்டல் நெட்ஒர்க்ஸிலிருந்தோ எந்தப் படைப்புகளையும் அனுமதியின்றி எடுக்க முடியாது. இது ஒரு அறிவுசார் சொத்து உரிமை ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்தின்படி காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்டாலும் ஒப்பந்தத்தில் இந்தியா இணைய மறுத்து வந்தது. இதனால் உலக நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின் கடுமையான விமர்சனங்களுக்கு இந்தியா ஆளாகிவந்தது.

பின்னர், ஏன் திடீரென்று இந்தியா இணைய சம்மதித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பின்னணியில், மண்டல முழுமையான பொருளாதார கூட்டணி (Regional Comprehensive Economic Partnership - RCEP) அமைப்பு இருப்பதுதான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பில் இணைவதற்கான முன் நிபந்தனையாக விப்போ ஒப்பந்தத்தில் இணைவது முன்வைக்கப்பட்டது. RCEP இந்தியா இல்லை என்றால் தென்கிழக்கு ஆசியாவில் நுழையவே முடியாது. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் மேலாண்மையை நிறுவுவதற்கு RCEPதான் துருப்புச் சீட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive