Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பா இத படிங்க... மிஸ் பண்ணிடாதீங்க



கண்ணாடி அணிவதென்பது பொதுவாக கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்ற இரண்டு பார்வை சம்பந்தப்பட்ட கோளாறுகளால் தான். அதுதவிர தலையில், மூளையில் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளோ அதீத தலைவலியோ இருந்தால், அதனால் சில சமயங்களில் பார்வைக் குறைபாடுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது.

அப்படி எதற்காகவாவது கண்ணாடி அணிந்திருப்பவர்கள் அல்லது மருத்துவர்களால் கண்ணாடி அணிய வற்புறுத்தப்படுகிறவர்கள் செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். எளிதில் இந்த பார்வை குறைபாட்டை சரிசெய்து விட முடியும்.

அற்புத மருந்து

பார்வைக் கோளாறை சரி செய்யும் அரு மருந்தாக முருங்கைப் பூ பயன்படுகிறது. அந்த முருங்கைப் பூவை வைத்து உங்களுடைய பார்வைக் கோளாறை சரி செய்யும். முருங்கைப் பூவை அப்படி எந்தெந்த பொருள்களுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

பசும்பால்

முருங்கைப் பூவை நன்கு அலசி, சுத்தம் செய்து, அதை சுத்தமான பசும்பாலில் சேர்த்து நன்கு காய்ச்சி காலையும் மாலையுமாக தினமும் இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஈரப்பதம் அதிகரிக்கும். அதனால் கண் பார்வை குறைபாடு நீங்கும்.

தேன்

கண்களில் வெள்ளெழுத்துப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இந்த முருங்கைப் பூ மிகப்பெரிய தீர்வாக அமையும். முருங்கைப் பூவை நன்கு சுத்தம் செய்து அதை வெயிலில் உலர்த்தி, காய வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு காய்ந்த மலர்களைப் பொடி செய்து, அந்த பொடியை தேனில் கலந்து தினமும் இரண்டு முறை காலையும் இரவும் சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து பிரச்னை குறையும்.

முருங்கைப்பூ கஞ்சி

முருங்கைப் பூவினை நன்கு அலசி சுத்தம் செய்துகொண்டு, அதை சுத்தமான பசும்பாலில் சேர்த்து நன்கு கஞ்சிபோல காய்ச்ச வேண்டும். அதனுடன் சுவைக்காக சிறிது சீரகம், வெள்ளைப்பூண்டு, சிறிது மிளகும் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சுவை பிடித்தவர்கள் சில துளிகள் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

கீரைகள்

தினசரி உணவுடன் பண்ணைக் கீரை, பொன்னாங்கன்னி கீரை, சிறுகீரை, கேரட் ஆகியவற்றை உங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


Third party image reference
பால் சாதம்

அடிக்கடி இரவு உணவாக பால் சாதம் சாப்பிடுவது நல்லது. அதேபோல், இரவு உணவுக்குப் பின்னர் பால், பழம் சாப்பிடலாம்.

பேதி மருந்து

நான்கு மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து, மாதம் ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய மருந்து எடுத்துக் கொண்டால், அன்மூலம் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் தீரும்.




2 Comments:

  1. கிட்டப்பார்வை,தூரப்பார்வை சரியாக வைத்தியம் கூறவும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive