மொபைல் ஆப்' மூலம் துப்புரவு பணி கண்காணிப்பு தெற்கு வட்டார துணை ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!

சென்னை:துப்புரவு பணிகள் துரிதமாக
நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், '
மொபைல் ஆப்' மூலம் கண்காணிக்கும் பணியை, மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை ஆணையர் துவங்கி உள்ளார்.
சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டாரத்தில் அடையாறு, சோழிங்கநல்லுார், பெருங்குடி, ஆலந்துார் மற்றும் வளசரவாக்கம் ஆகிய மண்டலங்கள் உள்ளன. அடையாறில், 'ராம்கி' என்ற தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதர மண்டலத்தில், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் மூலம்துப்புரவு பணி செய்யப்பட்டு வருகிறது.
புகைப்படம்
மொத்தம், ஐந்து மண்டலத்தில் உள்ள, 58 வார்டுகளில், ஒவ்வொரு வார்டுக்கும், ஒரு துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள், துப்புரவு பணியை கண்காணித்து, சுத்தம் செய்த தெருக்களை ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் சுத்தம் செய்யப்பட்ட தெருக்கள், குப்பை அள்ளிய பின் தொட்டி அமைந்துள்ள பகுதியை புகைப்படம் எடுத்து, தெற்கு வட்டார துணை ஆணையர் கோபால் சுந்தர்ராஜ், கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இதற்காக, 'வாட்ஸ்-ஆப் குரூப்' உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், புகைப்படம் மற்றும் பணிகள் குறித்து, துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பதிவு செய்வர்.
இதில், சிலர் தகவல்களை தவறாக பதிவு செய்வதாக புகார் எழுந்தது.அதில் கள ஆய்வுக்கு செல்லாமல் புகைப்படம் அனுப்புவது, ஏற்கனவே எடுத்த பழைய புகைப்படத்தை மீண்டும் அனுப்புவதும் போன்ற தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.தற்போது, இது போன்ற முறைகேடுகளை தடுப்பதற்காக, 'TIMESTAMP CAMERA' என்ற, 'மொபைல் ஆப்' மூலம், புகைப்படங்களை பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முறைகேடு
இந்த, மொபைல் ஆப் மூலம் புகைப்படம் எடுக்கும் போது, தெரு பெயர், தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்கள் தானாகவே அதில் பதிவாகி விடும். இதனால், பழைய புகைப்படங்களை மீண்டும் அனுப்புவது போன்ற முறைகேடுகள் தவிர்க்கப்படும். அதேபோல், பணி நடைபெறும் இடத்தில் இருந்து புகைப்படம் அனுப்பப்படுவதால், பணியில் நடக்கும் முறைகேடும் தடுக்கப்படும்.
முதற்கட்டமாக, அடையாறு மண்டலத்தில் இந்த மொபைல் ஆப் மூலம் துப்புரவு பணி தொடர்பான நடவடிக்கை பதிவு செய்யப்படுகிறது. அடுத்தகட்டமாக, இதர நான்கு மண்டலங்களில், இதே போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது

Share this

0 Comment to "மொபைல் ஆப்' மூலம் துப்புரவு பணி கண்காணிப்பு தெற்கு வட்டார துணை ஆணையரின் அதிரடி நடவடிக்கை!!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...