சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவியர், 1,871 பேர், புலி வடிவத்தில் நின்று, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச புலிகள் தினம், ஆண்டுதோறும், ஜூலை 29ல், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆவடி, காமராஜர் நகர், பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தினர்.
புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், 6,000 சதுரடி பரப்பில், 1,871 மாணவியர், புலி வடிவில் நின்றனர். இந்நிகழ்ச்சி, 'இந்தியன் வேர்ல்ட் ரெக்கார்ட்' நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments