NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

11ஆம் வகுப்புக்கு தேர்வு அவசியமா? - Full Article

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள்
துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத வாய்ப்பு ஏற்பட்டு தானொரு இளமையிலேயே நல்ல அறிவியல் புதுமை படைக்கும், திறன் படைத்த மாணவன் என வெளி உலகுக்கு பறைசாற்றி தங்களுடைய படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பார்கள்.அவர்கள் படிப்பில் சாதிப்பார்கள்.புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்த நாட்டுக்காக அர்ப்பணித்து இந்த நாட்டை விட்டு செல்ல மாட்டார்கள்.இந்த நாட்டு நலம் விரும்பியாக இருப்பார்கள். மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் தேர்வும் இதேபோல பள்ளி மாணவர்களையும் மூன்று பிரிவுகளாக பிரித்து தேர்வு நடத்தி அவர்களுக்கு அறிவியல் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்கிறது. மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் என்ற நிறுவனமும் 2 வகை வழிகளில் தேர்வுகள் நடத்தி இந்திய அளவில் தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சி கூடங்களுக்கு மற்றும் உலக அளவில் ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறது.இவ்வாறு செய்வதால் மருத்துவ படிப்பிற்கு நடத்தும் நுழைவுத் தேர்வுகளையும் இன்னும் எதிர்காலத்தில் வரக்கூடிய நுழைவுத் தேர்வுகளையும் மாணவர்கள் எளிதில் அணுகலாம்.அனைத்துப் பாடங்களையும் முக்கியமாக மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது பள்ளிக்கல்வித்துறை சிரத்தையாக எடுத்து தயாரித்த அனைத்து வகுப்பு பாடங்களையும் ஒவ்வொரு எழுத்தும் கூட விடாமல் நுகர்ந்து படிக்கும்போது,விரும்பி படிக்கும் போது அனைத்து அறிவுகளும்,அடிப்படைக் கல்வியும் மிகத் திறம்பட அவர்கள் மனதில் பதிந்து அவர்கள் திறன் பெற்று மிளிர்வார்கள் மற்றும் ஒளிவார்கள்.மற்றும் அவர்கள் பல கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட பாடப் புத்தகத்தின் ஒவ்வொரு வகுப்பையும் உணர்ந்து தனது மனதில் நிறுத்துவார்கள்.எவன் ஒருவனுக்கு அனைத்து வகுப்புக்கான பாடப்புத்தகத்தின் பாடத்தின் புரிதல் திறன்பட இருக்கிறதோ அவன் தான் மேற் வகுப்புகளில் அறிவியல் சாதனை படைப்பான்.அதைவிடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு பெயரளவில்தான் நடத்துவோம் என்று அறிவிப்பு விடுகிறது அரசு இது சோம்பேறித்தனத்தை தான் காட்டுகிறது.இது மாணவர்களை சோம்பேறித்தனத்துக்கு உண்டாக்கி நீட் போன்ற பயிற்சி மையங்களை உருவாக்கி அதாவது தனியார் மையங்களுக்கு சாதகமாகத்தான் இந்த பதினொன்றாம் வகுப்பில் சாராம்சத்தை அதாவது 11ஆம் வகுப்பு தேர்வின் மற்றும் 11ம் வகுப்புப் பாடத்தின் முக்கியத்துவத்தை குறைப்பது ஆகும். இப்போக்கு மீண்டும் மீண்டும் கல்வி கேவல நிலைக்கு செல்வது ஆகும்.பதினொன்றாம் வகுப்பில் உள்ள பாடங்கள் எதிர்வரும் நீட் தேர்வு எழுதி ஒரு மாணவன் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தாலும் முதலாம் ஆண்டில் 11-ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் உள்ள பகுதி பாடங்களை தான் அவன் படிப்பான்.அது எந்த ஒரு படிப்பாக இருக்கட்டும் இன்னும் எதிர்காலத்தில் இளங்கலை கலைப்பிரிவிற்கும்,இளங்கலை அறிவியல் பிரிவிற்கும் நிச்சயம் போட்டித் தேர்வான நுழைவுத் தேர்வு நடத்தி தான் சேர்க்கை முறை நடைபெறும்.அவ்வாறு தான் நடைபெற வேண்டும்.மெல்லக் கற்கும் மாணவன் என்பதற்கு மாணவன் காரணமல்ல அங்குள்ள சோம்பேறி ஆசிரியர்கள் தான் காரணம். நான் மெல்ல கற்கும் மாணவன் தான் நான் முன்னுக்கு வரவில்லையா? என்னால் எவருடனும் போட்டி போடும் உள்ளது.இந்த தகுதியை எனக்கு உருவாக்கிக் கொடுத்தது 9 10 11 12 ஆம் வகுப்பு பாடங்கள் தான்.இந்த நான்கு வகுப்பு பாடங்கள் அது சார்ந்த மாநில அளவிலான திறன் தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான பொதுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு வகையான திறனாய்வுத் தேர்வுகள் எழுத எனக்கு உதவி புரிந்தது இந்த வகுப்பு படங்கள்தான். அனைவருக்கும் அத்தேர்வு உதவி புரியும்.இங்கே ஒன்பதாம் வகுப்பிற்கும் பத்தாம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் பதினொன்றாம் வகுப்பிற்கும் பன்னிரண்டாம் வகுப்பு இருக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.அதை விடுத்து அறிவியல் புதிது புனையும் நோக்கில் மற்றும் தொலை நோக்குப் பார்வையில் தொலைநோக்கு ஆழ்ந்த சிந்தனையில் பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் நடைபெற்றது அதை கேள்விக்குள்ளாக்கும் நிலையில் முட்டாள்தனமான முடிவை நடப்பு பள்ளிக்கல்வித்துறை தற்போது சோடை போன பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது.இது அவமானத்திற்கு உரியது. மாற்றம் அமைக்கிறோம் என்று அமைத்து தன்னுடைய முடிவில் அரசு பின் வாங்கும் போது அது கேவல நிலையாக மாறி வருகிறது.நாம் உலகப் போட்டியாளர்கள் பார்வையில் பார்த்து உலக போட்டி போடும் அளவுக்கு அனைவரையும் உருவாக்க வேண்டும்.அதை விடுத்து இந்த சாராம்சம் அனைத்தும் தனியார் பள்ளிகள் அதாவது தற்போது இந்த ஒரு வார காலத்துக்குள் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் தனியார் முகமைகள் கொடுத்த வற்புறுத்துதலால் போடப்பட்ட அரசாணைகள் ஆகும்.

"மேமிகு அறிவியல் சிந்தனை கொண்ட உயர்நீதிமன்ற மேமிகு நீதி அரசர்கள் அவர்களே தயவுசெய்து உங்கள் கண்களை திருப்புங்கள் இந்த நாடு,நம் தமிழ் நாடு இந்தப் பண்பாடு நாடு இன்னும் பள்ளத்தில் போகத்தான் துடிக்கிறது.எவ்வளவோ ஆழ்ந்த முயற்சி எடுத்து உண்மையிலேயே சொல்லுங்கள் உங்கள் உணர்ச்சிகளை உணர்வுகளை தூண்டி தனிமையில் தனிமனிதனாக தனக்காக சிந்திப்பது போல் சிந்தித்து சொல்லுங்கள் உண்மையைச் சொல்லுங்கள் இப்பொழுதாவது சொல்லுங்கள் நான் வேண்டுகிறேன் உங்களின் எந்த உணர்வுகளை தொட்டு நான் வேண்டினால் நீங்கள் மனசு வைப்பீர்கள் அதைச் சொல்லுங்கள் நான் வேண்டுகிறேன்"
உதயச்சந்திரன் இந்த யுகத்தின் அறிவுலக உண்மை வாதி,உணர்வு வாதி,பொதுநல சிந்தனையாளர்,கல்வியில் சீர்திருத்த உலக வல்லுநர் ஓய்வில்லாமல் உழைத்த தூக்கம் கூட இல்லாமல் உழைத்த உன்னதர்.

அவரை தூக்கி எங்கெங்கோ மாற்றுகிறார்கள் அவர்கள் உருவாக்கிக் கொடுத்த பாடத்தை நாம் படிக்க வேண்டும்.ஒரு கட்டத்தில் உங்களின் ஆழக்கவனிப்பு தீர்ப்புகளை கூட வருங்கால சோம்பேறி வழக்குரைஞர்கள் ஆய்வுக்குட்படுத்தாமல் தற்காலிக தன் நிலைக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கலாம்.இந்த நிலையில் தான் இன்றைய அனைத்துத் துறைகளும் உள்ளது.
ஏற்கனவே நாம் பழமையை மறந்து விட்டு பாதி வாழ்நாள் வருடங்களை தொலைத்து விட்டோம் நம் வாழ்நாள் குறைந்து விட்டது. பெரியாரையும் அண்ணாவையும் அம்பேத்காரையும் நேருவையும் ஸ்டாலினையும் இன்னும் பல்லுலக பல்வேறு வகை துறை சார்ந்த வல்லுநர்களின் புத்தகங்களையும் அவர்களின் எழுத்துக்களையும் நாம் படிக்க தவறிவிட்டோம்.தற்பொழுது புத்தகங்கள் வாங்கும் போக்கு கூடியுள்ளது.ஆனால் ஆழக்கவனித்து ஊன்றி வாசிக்கும்போக்கு நிச்சயம் பின்தங்கி தான் உள்ளது. ஒவ்வொரு பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிற்கும் நூலகம் வேண்டும். அந்த வகுப்பில் இயற்பியல் பாடம் என்றால் நடப்பு பாடத்தை கற்றுக் கொடுக்கும் அதாவது நடப்பில் நடந்து கொண்டிருக்கும் உலக இயற்பியல் போக்குகளை அறிந்து கொள்ளும் மாத,வார பத்திரிக்கைகள் வேண்டும்.அந்த அளவுக்கு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் அதை விடுத்து மீண்டும் மீண்டும் மனப்பாடக் கல்வியை உட்படுத்தி மாணவர்களை சோம்பேறியாக இந்த அரசு முன்னெடுத்து வருகிறது என்பதை எந்நேரமும் இந்நேரமும் மறுக்க முடியாது. தயவுசெய்து அருள்கூர்ந்து சொல்லுகிறேன் பதினொன்றாம் வகுப்பு பாடம் இல்லாமல் ஒன்றுமே இல்லை.மூலமே இல்லாமல் ஒரு முறை எப்படி உருவாகும்.ஒன்பதாம் வகுப்பு இல்லாமல் பத்தாம் வகுப்பு இல்லை பதினொன்றாம் வகுப்பு இல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு இல்லை எனவே பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மற்றும் அறிவியல் மாற்றங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் நடப்பு அறிவியல் முறைகளை அறிந்து கொள்ள இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இன்றைக்கும் நீங்கள் பாருங்கள் தமிழக பாடத்திட்டத்தையும் மத்திய அரசு பாடத்திட்டத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ஒருகட்டத்தில் சென்ற ஆண்டு மத்திய மனித வளத்துறை அமைச்சர் தற்போதுள்ள பாடம் இளங்கலை பிரிவினர் படிக்கும் பாடங்கள் போல் கடினமாக உள்ளது அதை நாங்கள் குறைக்க இருக்கிறோம் என்று சொன்னார்.தற்போது அது கிடப்பில் போடப்பட்டு விட்டது.காரணம் நம் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடம் உலக அளவில் பல்வேறு நாடுகள் தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் அதனைப் பதிவிறக்கம் செய்து முக்கியமாக ஜப்பான் நாட்டினரும் மலேசியா நாட்டினரும் சிங்கப்பூர் நாட்டினரும் பதிவிறக்கம் செய்து படித்து வந்தனர் மற்றும் படித்துக் கொண்டு வருகின்றனர்.ஒன்றாம் வகுப்பு ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு இந்த 4 வகுப்புகளுக்கே இவ்வளவு ஆரவார கரகோஷம் வரவேற்பு என்றால் இன்னும் ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு இவை அனைத்தும் நமது கைகளில் தவழ்ந்தால் மற்றும் விரைவில் தவழ இருக்கின்றது நம் பிள்ளைகளின் எவ்வளவு மாற்றம், முன்னேற்றம் ஏற்படும்.
தொடர்ந்து வேறு ஒன்றும் வேண்டாம் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாவட்ட அளவில் நடக்கும் வினாத்தாள்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும் திறம்.மற்றும் அனைத்து வகை பொதுத்தேர்வு ஆணையங்களையும் மற்றும் அவர்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளையும் நம் பொதுத்தேர்வு மாநில அளவில் நடத்தப்படும் முழு ஆண்டுத் தேர்வில் வினாத்தாள்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதும்
மற்றும் பல்வேறு வகையான நாம் நடத்தும் நம் தேர்வுகள் துறை நடத்தும் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தும் திறனாய்வுத்தேர்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் திறனாய்வுத்தேர்வுகளில் இருந்தும் மற்றும் நம் மாநில பொதுத்தேர்வு வினாத்தாள்களில் இருந்தும் கேட்கப்படும் வினாக்கள் அதிகப்படியாக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மாநில தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளிலும் வெளிவருவது ஆச்சரியமாக இருந்தது,. ஆச்சரியமாக இருக்கிறது.
அந்த அளவுக்கு நாம் திறனாய்வுத் தேர்விலும் மற்றும் போட்டித் தேர்வு வினாத்தாள்கள் தயார் செய்வதிலும் திறன் பெற்றுள்ளோம்.நான் உறுதியிட்டுச் சொல்கிறேன் 11ஆம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு நீர்த்துப்போகச் செய்தால் நிச்சயமாக நீட் தேர்வு தவிர இந்திய தொழில்நுட்ப கழகம் நடத்தும் தேர்வுகளில் நம் தமிழ் மாணவர்கள் இறந்து போவார்கள். அந்த அளவுக்கு மோசமாக கல்வி போய்விடும் தற்போது பல ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வீணடிக்கப்பட்டு விடும் இந்த புத்தகங்கள் கொண்டுவந்ததே தற்காலத்திற்கு ஏற்றார்போல் உருவாக்குவதற்கும் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை உருவாக்குவது மற்றும் எதிர்கொள்வது என்ற நோக்கத்திற்கே.எதிர்காலத்தில் அனைவரும் அனைத்து திறமைகளையும் பெற்று இருக்க வேண்டும் மற்றும் நாட்டுக்கு தேவையான குறிப்பாக நம் நாட்டுக்கு தேவையான மற்றும் உலகுக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை அறிவை கூர்தீட்டி தினந்தோறும்,கூர்தீட்டி தினந்தோறும் அறிவை விரிவு செய்து அதிகமான அறிவுப் பசியை உண்டாக்கி வாழ்வில் வெற்றி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த புத்தகம் பொதுத்தேர்வு இல்லாத காரணத்தாலும் குப்பையில் வீசப்படும் வினாத்தாள்கள் அதாவது மாவட்ட அளவில் மற்றும் பெயரளவில் நடத்தப்படும் தேர்வுகளால் நம் தமிழ் மாணவர்கள் வீணாய் போவார்கள்.நிச்சயம் நான் சொல்கிறேன் மீண்டும் சொல்கிறேன் அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வேண்டும்.ஒரு பக்கம் மேல்நிலைக்கல்வி ஆசிரியர்கள் நாங்கள் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று திணறுகிறார்கள் முதலில் அவர்கள் தங்கள் பாடத்தை ஒழுங்காக புரிந்து வைத்து பாடம் நடத்த அனைவரும் தகுதி பெற்றுள்ளனரா? உயிர் போகும் அளவுக்கு உழைத்து அறிவை விரிவு செய்ய வேண்டும் அந்த அளவுக்கு ஆசிரியர் இருக்கவேண்டும்.ஆனால் சென்ற வாரம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று ஒரு போராட்டம் நடத்தினார்கள் இன்றும் நடத்தி வருகிறார்கள் இது மாநில அளவில் நீளப் போகிறது என்றும் சொளக்கிறார்கள்.வேறு ஒன்றும் வேண்டாம் சனிக்கிழமை மட்டும் ஒரு நாள் அதிகமாக இருந்து நீட் தேர்வுக்கு ஒவ்வொரு ஆசிரியரும் பயிற்சி அளித்தார்கள் என்றால் நாம் தனியார் நிறுவனத்திற்கு(கொள்ளைக்கார மோசடி லாப நோக்கோடு செயல்படும்) அதிகமாக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை.அரசிடம் தனியார் நிறுவனங்கள் அதாவது முக்கியத் துறை சார்ந்த அமைச்சர்களோ அல்லது அவர்களின் பினாமிகள் நடத்தும் தனியார் நிறுவனங்களால் அரசுக்கு கொல்லைப்புறம் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் சாதித்து விடுகிறார்கள்.இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.இன்றும் நாமக்கல் மற்றும் பல்வேறு வகையான ஊர்களில் 1000,2000 மாணவர்களை நீட் பயிற்சி என்ற பெயரில் நாமக்கல்லில் ஊசி மருந்து ஏற்றிய கோழிகளை வளர்ப்பது போல் நம் மாணவர்களை வளர்த்து வருகிறார்கள்.எதிர்காலம் என்ன என்றே அறியாத ஒன்றுமே அறியாமல் மாநில அரசின் நடுநிலைப்பள்ளியில் அரசு ஆசிரியரின் அரவணைப்போடு உண்மையான பாடம் கற்று வருகிறான் ஒரு மாணவன் அங்கு தான்,அவன் தான் அந்த மாணவன்தான் வெற்றி பெறுவான்.தொடர்ந்து சொல்வேன் தலையில் குட்டி சொல்வேன் நாம் நம் தலையில் கொட்டாவிட்டால் வேறொரு நாட்டுக்காரன் பெட்ரோல் டீசல் என்ற பெயரில் நம்மளை தினந்தோறும் நம் பொருளாதாரத்தை தினந்தோறும் சுரண்டிக் கொண்டே இருப்பான் நிச்சயம் மீண்டும் மீண்டும் தொடரும் தொடர்ந்து எழுதுவேன்………
Article by Mr. GANESHKUMAR 
Educationalist, Coimbatore.
CELL:9659505947




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive