கேபிள், 'டிவி' கட்டணம் குறையாது!!!

'கேபிள் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை' என,
அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது:'டிவி' சேனல்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளும், 'அலகாட்' முறையை, 'டிராய்' அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, ஜன., 1ல் அமலாகிறது. இதில், எந்த சேனல் வேண்டும்; எது வேண்டாம் என்பதை, பார்வையாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.இதன்படி, பல்வேறு சேனல்கள், தங்களுக்கான, எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயித்துள்ளன. அவர்களிடம் பேரம் பேச முடியாது. இந்த மாத இறுதியில், சேனல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கோரியபடி, கட்டண குறைப்பு சாத்தியமில்லை.டிராய் விதிமுறைப்படி, வினியோக கட்டணத்தில், அரசு கேபிள், 'டிவி' நிர்வாகத்திற்கு, 55 சதவீதமும், கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு, 45 சதவீதமும் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share this

0 Comment to " கேபிள், 'டிவி' கட்டணம் குறையாது!!!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...