ஜவ்வாது மலை வனத்துறை பள்ளியில் காலியாக உள்ள 8 இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் வனக்கோட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள வனத்துறை பள்ளிகளில் 8 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜவ்வாது மலையில் தங்கி மாணவா்களுக்கு கல்வி கற்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, அதைப் பூா்த்தி செய்து மாவட்ட வன அலுவலா், திருப்பத்தூா் கோட்டம், அரசு தோட்டம், திருப்பத்தூா் - 635601 வேலூா் மாவட்டம் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு முடித்தவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
other districk candi?
ReplyDeleteவேலுர் ஆசிரியர் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமா
ReplyDeleteவேலுர் ஆசிரியர் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியுமா
ReplyDeletePet teacher wanted erika
ReplyDelete