சென்னை:
சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகத்தில், நாடார் சமூகம் பற்றிய, சர்ச்சைக்குரிய
தகவல் இடம் பெற்று உள்ளதை கண்டித்தும், அதை நீக்க வலியுறுத்தியும், நாடார்
அமைப்புகள், நேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில், அரசியல் தலைவர்கள்
பங்கேற்றனர்.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யை கண்டித்து,
நாடார் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில், சென்னை,
வள்ளுவர் கோட்டத்தில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.போராட்டத்தை,
காங்., மூத்த தலைவர் குமரி அனந்தன் துவக்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித்
துறை அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, பா.ம.க.,
தலைவர் மணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும்திரைத்துறையினர்
பங்கேற்றனர்.போராட்டத்தில் பங்கேற்றோர் கூறியதாவது:மத்திய இடைநிலை கல்வி
வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்புக்கான, சமூக
அறிவியல் பாடத்தில், நாடார் சமூகம் பற்றிய, தவறான மற்றும் சர்ச்சைக்குரிய
கருத்துகள் பதிவாகிஉள்ளன. இதை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தியும்,
வழக்குகள் தொடுத்தும், சர்ச்சைக்குஉரிய பகுதியை நீக்க, மத்திய அரசு இதுவரை
நடவடிக்கை எடுக்கவில்லை.மற்ற துறைகளில் தவறு நடந்தால், அதை, அதிகாரிகள்
வாயிலாக, சரி செய்து விடலாம். கல்வித் துறையில் தவறு நடந்தால், ஒட்டு மொத்த
மாணவர்களும் பாதிக்கப்படுவர். இந்த சர்ச்சைக்குரிய மற்றும் தவறான
பாடத்தால், நாயர் மற்றும் நாடார் சமூக மாணவர்கள் இடையே மோதல் உருவாக
வாய்ப்புள்ளது. அதனால், அந்த பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும்.இவ்வாறு
அவர்கள் கூறினர்.
Public Exam 2026
Revision Test 2026
Home »
» சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கக்கோரி அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...