51 வயதில் தேர்வு எழுதி அரசு பணியை பெற்ற சீதா..! இவர் நம்பிக்கைக்கு கிடைத்த பாராட்டு மழை..!

 
 
 TNPSC தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று கலந்தாய்வுக்கு வந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார் 51 வயதான சீதாம்மா என்பவர்.

இது குறித்து அவர் கூறியது..!

என் பெயர் சீதா, மதுரை தான் என் சொந்த ஊர். நானும் என் கணவரும் எங்கள் ஊரிலேயே டைப்ரைட்டிங் வகுப்பு நடத்தி வருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் எல்லாம் இன்று, அரசு வேலையில் பெரிய நிலையில் உள்ளனர்

அவர்கள் மீண்டும் எங்கள் வகுப்பிற்கு வந்து இனிப்பு வழங்கி அவர்கள் பயின்ற எங்கள் பயிற்சி வகுப்பை புகழ்ந்து கூறுவார்கள். அப்போது எனக்குள் ஒரு ஆசை வந்தது..


ஏன் நாமும் இது போன்று தேர்ச்சி பெற கூடாது என... அதன் பின், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அரசு வேலை பெற தொடர்ந்து போராடி வந்தேன்.

அப்போது வயது எனக்கு 40.
அதன்பின் டைப்ரைட்டிங்ல முதுநிலை படித்தேன்.. பின்னர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினேன்.


 ஆனால் பல முறை தேர்வில் தோல்வியையே தழுவினேன்.பலரும் என்னை கிண்டல் செய்ய கூட தொடங்கினேன்.

 அப்போது படித்தது வேறு. இப்போது இருப்பது வேறு.. என பலரும் என்னை இந்த முயற்சியை செய்ய விடாமல் தடுத்தனர். ஆனால் என்னுடைய கணவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்து புத்துணர்ச்சியை கொடுத்தார்.

நான் 140 கொஸ்டின் சரியாக போட்டால்கட் ஆப் 160-ஆக வரும். நான் 160எடுத்தால் கட் ஆப் 180-ஆக வரும். இது போன்று பல முயற்சிக்கு பின்பு தான், நான்  நினைத்ததை அடைந்தேன் என பெருமையாக தெரிவித்து உள்ளார்.

 சீதாமாவின் முயற்சிக்கும் வெற்றிக்கும் தமிழக மக்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this

0 Comment to "51 வயதில் தேர்வு எழுதி அரசு பணியை பெற்ற சீதா..! இவர் நம்பிக்கைக்கு கிடைத்த பாராட்டு மழை..!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...