NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உங்கள் வருமானம் ரூ.7.75 லட்சமா? வருமான வரி செலுத்துவதை தவிர்ப்பது எப்படி?

ரூ.7.75 லட்சம் வரை வருமானம் பெறும் ஒருவர் வருமான வரி செலுத்துவதை தவிர்ப்பது எப்படி? என அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.நடப்பு நிதியாண்டில் உள்ள கணக்கீடுப்படி ரூ.2.5 லட்சம் வரையிலான தனி நபர் வருவாய்க்கு வருமான வரி கிடையாது. ஆனால் ரூ.2.5 லட்சம் முதல்ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீதமும்,ரூ.10 - 20 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 20 சதவீதமும், அதற்கு மேல் 30 சதவீதமும் வருமான வரியாக வசூலிக்கப்படுகிறது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

வருங்கால வைப்பு நிதி மற்றும் சில குறிப்பிட்ட பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் ரூ.6.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.நிரந்தர கழிவுத்தொகை ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.2.4 லட்சம் ரூபாய் வரையில் வீட்டு வாடகைக்கு வருமான வரி கிடையாது.வங்கி மற்றும் தபால் நிலையங்களில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு தற்போது வழங்கப்படும் வருமான வரி விலக்கு ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்த ஆண்டு வருமானத்தில் 80சி உள்ளிட்ட வரிச்சலுகை பிரிவுகளின் கீழ் பிஎப், என்பிஎஸ், பங்கு வர்த்தகம், மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வரிச்சலுகைகளும், அரசு வழங்கும் நிரந்தர கழிவு என அனைத்தும் போக மீதமுள்ள வருமானம் ரூ. 5 லட்சத்துக்குள் இருந்தால், அந்தத்தொகைக்கு எந்த வரியும் இல்லை.ஆனால், இவையெல்லாம் கழித்தது போக வரும் வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு முந்தைய வரி கணக்கீடுகளே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வரிச்சலுகைகள் மூலம் 3 கோடி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வரி செலுத்துவோர் பலனடைவார்கள் என பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.உதாரணமாக, ஒருவர்  2019-20 நிதியாண்டில் ரூ.6.5 லட்சம் வருமானம் ஈட்டுகிறார் என்றால்  ரூ.1.5 லட்சம் முதலீட்டளவில் பிரிவு 80சியின்  கீழ்  தவிர்த்து அவரது  நிகர  வருமானம் ரூ. 5 லட்சம். அதற்கு  வருமான வரி ரூ.12,500 (ரூ  2.5 லட்சத்திற்கு 5 சதவீதம் ) செஸ் வரி நீங்கலாக (ரூ.2.5 லட்சம் வருமானம் வரி விலக்கு).தனது வருமானம் குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.5 லட்சம் வரை இருக்கும்பொழுது, ரூ.12,500க்கு கழிவு கிடைக்க தகுதியானவர் ஆகிறார். இதனால் அவரது நிகர வரி செலுத்துவது  பூஜ்ஜியமாக இருக்கும்.ஒரு வருடத்தில் ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டுபவர்ரூ.72,500 வரி செலுத்த வேண்டும் (ரூ2.5 லட்சத்திற்கு 5 சதவீதம்  வரி  மற்றும்  ரூ. 3 லட்சத்திற்கு 20 சதவீத  வரியும் விதிக்கப்படும்). வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், வரி செலுத்துவோருக்கான  ரூ1.5 லட்சம் விலக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

5 லட்சம் ரூபாய்க்கு மேலான தனி நபர் வருவாய்க்கான வரி விகிதத்தில் மாற்றமில்லை. எனவே, அவர்கள் பழைய மாதிரி, தங்கள் வருவாய்க்கு 20 சதவீத வரி செலுத்த வேண்டிவரும். எனவே ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருவாய் பிரிவினருக்குமட்டுமே இது வரப்பிரசாத பட்ஜெட்டாகும்.

இருந்தாலும் அடுத்த வருமான வரி ஆண்டில் தான்  இதில் தெளிவு பிறக்கும்.ரூ.7.75 லட்சம்  வரை வருமானம் கொண்ட ஒரு நபர் எப்படி வரி செலுத்துவதை தவிர்ப்பது என எக்னாமிக்ஸ் டைம்ஸ் கூறி உள்ள வரி செலுத்தும் அட்டவணை  வருமாறு:-

வரி கணக்கீடு ரூபாயில் விவரம் பழையது புதியது மொத்த சம்பளம்

7,75,000 7,75,000 நிலையான கழிவு (40,000) (50,000)நிகர சம்பளம் 7,35,000 7,25,000 பிற ஆதாரங்கள் மூலம் வருமானம் 10,000 10,000 மொத்த வரிக்குட்பட்ட வருமானம் 7,45,000 7,35,000  80C பிரிவின் கீழ் கழிவு (1,50,000)(1,50,000) 80CCD(1B) பிரிவின் கீழ் கழிவு (50,000) (50,000) 80D பிரிவின் கீழ் கழிவு (25,000) (25,000) 80TTA பிரிவின் கீழ் கழிவு (10,000) (10,000)சம்பள வருவாய் 5,10,000 5,00,000 வருமான வரி 14,500 12,500 87A பிரிவின் கீழ் கழிவு - (12,500)கழிவுக்கு பின் செலுத்த வேண்டிய வரி 14,500 - கூடுதல் வரி@10% / 15% - - கூடுதல் வரிக்கு பிறகு செலுத்த வேண்டிய வரி 14,500 - கல்வி வரி @ 4% 580 - மொத்த வரி கூடுதல் வரி மற்றும் கல்வி செஸ் வரி 15,080 - வித்தியாசம் - கூடுதல் வரி செலுத்தத்தக்கது (15,080)ரூ.7.75 லட்சம் வருமானம் உள்ள ஒருவர் ரூ. 15,080  வரி செலுத்த வேண்டிய ஒருவர் 80C ,80D,மற்றும் 80CCD (1B) பிரிவுகளை பயன்படுத்தினால் ரூ. 15,080 பணத்தை சேமிக்கலாம.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive