'தகுதிக்கேற்ப பதவி உயர்வு'

குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இச்சங்க, 36வது ஆண்டு மகாசபை கூட்டம், கோவை தாமஸ் கிளப்பில் நடந்தது;
சங்க கொடியை உதவி தலைவர் பிரான்சிஸ் ஏற்றினார். பொது செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.'ஒப்பந்த ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். வாரியத்தில் பணியற்றும் ஊழியர்களுக்கு, 7,000 ரூபாய் போனஸ் வழங்கியுள்ள நிலையில், ஒப்பந்த ஊழியர்களுக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும்.'காலிப்பணியிடங்களை நிரப்புவதுடன், தகுதிக்கேற்ப பதவி உயர்வு அளிக்க வேண்டும். வாரியத்தில் நடைமுறையில் உள்ள உத்தரவுகளின்படி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள், தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

Share this