கூகுள் நிறுவனம் தனது க்ரோம் பிரவுசரில் புதிய அம்சங்களை வழங்க இருக்கிறது.
சமீபத்தில் பாஸ்வேர்டு செக்கப் எனும் க்ரோம் எக்ஸ்டென்ஷனை கூகுள் அறிமுகம்
செய்தது. இத்துடன் லுக்அலைக் யு.ஆர்.எல். அம்சமும் சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் நெவர்-ஸ்லோ மோட் எனும் அம்சத்தை வழங்க
இருக்கிறது.
புதிய நெவர்-ஸ்லோ மோட் அம்சம் ஸ்மார்ட்போன்களில் அதிவேக பிரவுசிங்
அனுபவத்தை வழங்கும். இந்த அம்சம் டேட்டாக்கள் லோட் ஆவதை தடுத்து நிறுத்தி
இன்டர்நெட் பக்கங்களை அதிவேகமாக திறக்கச் செய்யும். புதிய அம்சம் பற்றிய
விவரம் க்ரோமியம் கெரிட் வலைபக்கத்தில் வெளியாகியுள்ளது.
புதிய அம்சம் டேட்டாக்களை சிறிதளவு உடைக்க செய்யும் என்றும் இது மெமரி
பயன்பாட்டையும் குறைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நெவர்-ஸ்லோ மோட்
பற்றிய விவரம் அக்டோபர் 2018 இல் பதிவேற்றம் செய்யப்பட்டு, சமீபத்தில்
அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் கூகுள் க்ரோம் பிரவுசரில் பாஸ்வேர்டு செக்கப் எக்ஸ்டென்ஷன்
சேர்க்கப்பட்டது. இந்த எக்ஸ்டென்ஷன் உங்களது பாஸ்வேர்டு பாதுகாப்பு பற்றிய
விவரங்களை அவ்வப்போது சரிபார்க்கும். ஒருவேளை உங்களது கூகுள் அக்கவுண்ட்
ஹேக் செய்யப்பட்டால், கூகுள் தானாக உங்களது அக்கவுண்ட் பாஸ்வர்டை
மாற்றிவிடும்.புதிய அம்சம் தற்சமயம் பெரிய ஸ்க்ரிப்ட்களை பட்ஜெட் அடிப்படையில் தடுத்து
நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தரவுகளை
~CHECK~Content-Length~CHECK~ முறையில் பஃபெர் செய்யும். பட்ஜெட்கள்
பயன்பாடிற்கு ஏற்ப அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். இதனால் பெரிய
ஸ்க்ரிப்ட் கொண்ட வலைப்பக்கங்கள் குறிப்பிட்ட அளவுக்கு தடுத்து
நிறுத்தப்படும். கூகுள் க்ரோம் பிரவுசரில் நெவர்-ஸ்லோ மோட் வழங்குவது பற்றி
இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...