தேசிய தகுதித் தேர்வு (நெட்) புதிய பாடத் திட்டத்தின் கீழ் வரும் ஜூன்
மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை
(என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி
பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் -நெட்- தேர்வில்
தகுதி பெறுவது கட்டாயம்.
ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் இந்தத் தேர்வில், வரும் ஜூன் மாதத் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. இப்போது வெளியிட்டுள்ளது.
புதிய பாடத் திட்டம்: இந்தத் தேர்வானது புதிய பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும். புதிய பாடத் திட்ட விவரங்களை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு எப்போது? இந்தத் தேர்வானது ஜூன் 20, 21, 24, 25, 26, 27, 28-ஆம் தேதிகளில் முழுவதும் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.
தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு செய்யலாம். பதிவு செய்ய மார்ச் 30 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை மே 15 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்படும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...