Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'செல்வமகள்களுக்கு' உதவ வாங்க! அழைக்கிறது தபால்துறை

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக,
தபால்துறை துவங்கிய செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக, கோவை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் சுதிர்கோபால் ஜகாரே தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைய பிறந்த குழந்தை முதல், 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ ரூ.250 செலுத்தி, தபால் அலுவலகங்களில் கணக்கு துவக்கலாம். இத்திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு, வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி என, 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கும். 
அவசர தேவையெனில், ஐந்து ஆண்டு நிறைவில் கணக்கை முடித்து கொள்ளலாம். திருமணம் மற்றும் படிப்பு செலவுக்கு, 18 வயதில் சேமிப்பு தொகையில் பாதி அளவை பெறலாம்.தமிழ்நாடு தபால்துறை வட்டத்தில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைவதில், கோவை கோட்டம் இரண்டாமிடத்தில் உள்ளது.நடப்பாண்டு திட்டத்தில் இணைய 18,200 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தற்போது வரை 4,954 பேர் இணைந்துள்ளனர்.சேராத ஏழை சிறுமியர்க்கு, தொண்டு நிறுவனங்கள், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவி பெற்று, திட்டத்தில் சேர உதவ உள்ளோம்.இதன் வாயிலாக, 70 சதவீதம் பேர் நிச்சயம் தொடர்ந்து சேமிப்பில் ஈடுபடுவர். உதவ விரும்புவோர், கோவை தலைமை தபால் நிலையத்தை, 0422 - 2395637 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி என, 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கும். அவசர தேவையெனில், ஐந்து ஆண்டு நிறைவில் கணக்கை முடித்து கொள்ளலாம். திருமணம் மற்றும் படிப்பு செலவுக்கு, 18 வயதில் சேமிப்பு தொகையில் பாதி அளவை பெறலாம்.




1 Comments:

  1. தாபல்துறை முலம் செயல்படும் செல்வமகள் திட்டத்திற்க்கு உதவ எங்களது கிராம நகர முன்னேற்ற அறக்கட்டளையினை பயன்படுத்த வேன்டுகிறோம்.
    அன்புடன்
    M.சாலியாசமது
    நிறுவனர்
    123/8.செக்கடிதெரு.கம்பம்
    தேனி மாவட்டம்
    9943208727
    பதிவுஎண் 36/2009

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive