அங்கீகாரம் பெறாத தனியார்
பள்ளிகளுக்கான கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளும் முறையான அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதன்படி தமிழகத்தில்800-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் முறையாக அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகள் வரும் மே 31-ம் தேதிக்குள் அங்கீகாரம் பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில், ‘‘ஒரு பள்ளி முறையான அங்கீகாரம் பெறாவிட்டால், அங்கு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தகுதிஇல்லாதவர்களாக அறிவிக்கப்படுவார்கள். எனவே, இப்போது 10, 12-ம்வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களின்எதிர்காலம் பாதிக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு முறையாக அங்கீகாரம் பெறாதபள்ளிகளுக்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மே31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments