NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விருதுநகர் மாவட்டத்தில் சாதனை புரியும் விருதுகளுக்குச் சொந்தக்காரர்.......

கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது வத்திராயிருப்பு.


அந்த வத்திராயிருப்பில் ஏறத்தாழ 140 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது இந்து மேல்நிலைப் பள்ளி.தேசிய விஞ்ஞானி டாக்டர்.k.s.கிருஷ்ணன் பணியாற்றிய பள்ளி என்ற பெருமையையும் கொண்டுள்ள இந்தப் பள்ளியில் 1500 மாணவர்களுக்கு மேல் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் படிப்பதை மிகப் பெரிய பெருமையாக நினைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைவரும் இங்கு சேர்ந்து படிக்கின்றனர்.
இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.S.ராஜ சேகரன் இதே பள்ளியில் படித்து, ஆசிரியராகப் பணியாற்றி பின்பு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தான் போதிக்கும் பாடத்தில் 100% தேர்ச்சியை தொடர்ச்சியாக  ப் பெற்றுத் தந்துள்ளார். நான்கு ஆண்டுகாலம் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலராகப் பணிபுரிந்து பல சமூக சேவைகளைச் செய்துள்ளார்.
பள்ளியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு முன்னாள் மாணவர்களுடனும் பொதுமக்களுடனும் தொடர்பு கொண்டு பள்ளி வளர்ச்சியையும் மாணவர்கள் நலனையும் மேம்படுத்தி வருகிறார்.
அவர் பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்தே  10,11 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த தேர்ச்சி விகிதத்தை க் கொடுத்துள்ளார்.மேலும் இந்த ஆண்டு ஊரகத் திறனாய்வு த் தேர்வு மற்றும் தேசியத் திறனாய்வு த் தேர்விலும் இந்து மேல்நிலைப் பள்ளிமாணவர்கள் வெற்றி பெற்று சாதனை  படைத்துள்ளனர்
ஒன்றிய அளவில் மாபெரும் ஓவியக் கண்காட்சி நடத்தியும் தேசிய அளவில் பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி வெள்ளி பதக்கம் வென்று மாண்புமிகு தமிழக முதல்வர் கரங்களால் தலா ரூபாய்  1,50,000 பரிசை இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர்.
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தனது சொந்தச் செலவில் தினசரி சிற்றுண்டி வழங்கியும்,விளையாட்டு வீரர்களுக்கும்,நாட்டு நலப் பணி மாணவர்களுக்கும் சீருடை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கியும் மாணவர்களை ஊக்கப் படுத்தி வருகிறார்.
அது மட்டுமல்ல பெற்றோர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி வாய்ஸ் மெஸேஜ் மூலம் தகவல் கொடுத்து வருகிறார்.தேர்வு நேரங்களில் பொதுத்தேர்வு  எழுதும் மாணவர்களை அதிகாலை 5 மணிக்கு தொலைபேசி மூலம் எழுப்பி படிக்க வைககிறார்
இவரது வழிகாட்டுதலில் பள்ளி மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் நாளிதழ்களில் எழுத்தாளராகவும் இருக்கிறார்.
இவர் வணிகவியல் பாடத்தில் மாவட்டக் கருத்தாளராகவும் செயல் பட்டுள்ளார்.
இதுவரை இவர் பெற்ற விருதுகள்....
தினமலரின் லட்சிய ஆசிரியர் விருது
தேனி கலை இலக்கிய சங்கத்தின் நன்னெறி ஆசிரியர் விருது
ராஜபாளையம் jci ன் சமூக அர்ப்பணிப்பாளர் விருது
திருவில்லிபுத்தூர் அரிமா சங்கத்தின் நல்லாசிரியர் விருது
நெல்லை கிரின் சிட்டி அரிமா சங்கத்தின் தலைசிறந்த ஆசிரியர் விருது
சென்னை கலசலிங்கம் அறக்கட்டளையின் நற்சிந்தனை நல்லாசிரியர் விருது
மதுரை மல்லிகை அரிமா சங்கத்தின் நல்லாசிரியர் விருது
ஈரோடு jci  excelன் சிறந்த ஆசிரியர் விருது
ராஜபாளையம்  jci excelன் தன்னம்பிக்கை ஆசிரியர் விருது
நெல்லை அரிமா சங்கத்தின் சாதனையாளர் விருது
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வழங்கிய சீர் மிகு ஆசிரியர் விருது
ராஜபாளையம் கேசா டி மிர்  பள்ளியில் மனித நேயப் பண்பாளர் விருது
ஆகியவையாகும். இவரது பணியைப் பள்ளி நிர்வாகமும் ,ஊர் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இத்தனை செயல்பாடுகளுக்கும் பள்ளித் தலைவர்,செயலர்,நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தான் காரணம் என்கிறார் தலைமையாசிரியர் s.ராஜ சேகரன்...




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive