அரசு பள்ளிகளில், ஜூன், 3 முதல்ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு, கட்டாயமாக அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அரசின் சார்பில், சம்பளம்தரப்படுகிறது.
ஆனால், அரசின் செலவுக்குஏற்ற வகையில், தேர்ச்சி விகிதம் இல்லை என,
கணிக்கப்பட்டுள்ளது.இதனால், ஆசிரியர்களின் வருகை மற்றும் அவர்களின் பணி
நேரத்தை உறுதி செய்யும் வகையில், புதிய திட்டங்களை பள்ளி கல்வித்துறை
ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, ஆசிரியர்கள் பள்ளிகளுக்குதாமதமாக வருவதை தவிர்க்கும் வகையில்,
பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமலுக்கு வர உள்ளது.ஜூன், 3ல், பள்ளிகள்
திறக்கப்படும்நிலையில், ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவை
நடைமுறைப்படுத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான கருவிகள்
அமைக்கும் பணி, பள்ளிகளில்நடந்து வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...