Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

திருக்குறள்


அதிகாரம்:புகழ்

திருக்குறள்:231

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

விளக்கம்:

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

பழமொழி

Better later than never

காலம் தாழ்த்தினாலும் கருமத்தை முடிப்பது நல்லது.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் தான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்கப் போகிறேன். எனவே இப்பொழுதே சிறந்த பாரதம் உருவாக்க என் நடத்தை, எண்ணம் மற்றும் திறமைகளை சீர்தூக்கி வளர்த்துக் கொள்வேன்.

2. டீ. வி. சினிமா போன்ற பொழுது போக்குகளில் என் கவனத்தை செலுத்தாமல் ஆக்க பூர்வமாக நேரத்தை செலவிடுவேன்

பொன்மொழி

மனிதனின் புற ஊனம் எனும் உடல்ஊனம்    என்றுமே ஊனமாகாது. பொறாமை , தீய எண்ணம் உடைய
 அக ஊனமே உண்மையான ஊனம்.

---- ஹெலன் கெல்லர்

 பொது அறிவு

1.உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
             
நெதர்லாந்து

2. தங்க நுழைவாயில் எ‌ன்று‌ அழைக்கப் படும் நகரம் எது?

சான் பிரான்சிஸ்கோ

English words & meanings

* Safe - not in danger, பாதுகாப்பாக

* Sacrifice - giving up something you love the most for the benefit of others, தியாகம்

ஆரோக்ய வாழ்வு

2 ஏலக்காயை தாேல் நீக்கி வாயில்  பாேட்டு மென்று விட்டு  2  நிமிடம்  கழித்து வெந்நீர்  பருகினால்  இருமல் கட்டுப்படும்.

Some important  abbreviations for students

* ARF - Acute Renal Failure

* DJD - Degenerative Joint Disease

நீதிக்கதை

"ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும்

இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது.

பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும்.

மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும்.

இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு.

வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன.

ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது.

அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின.

“நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல” விலாங்கு கதறியது. நம்புவாரில்லை. விலாங்கு “முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ” என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.

பொய்யும் ஏமாற்றும் ஒரு நாளும் நம்மை வாழ வைக்காது...

வியாழன்

அறிவியல் & கணினி

Magic Glass

*ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பி, அதன் மீது ஒரு காகித அட்டையை வைத்து அழுத்தி மூடவும்.
 *பிறகு, குவளையைக் கவனமாகத் தலைகீழாகத் திருப்பவும்.
*திருப்பியதும் அட்டையில் இருந்து கையை எடுக்கவும். குவளையின் நீர் கீழ்நோக்கி இருந்தாலும் அட்டை கீழே விழாது. நீர் சிந்தாது.

காரணம்

காற்றின் மேல்நோக்கிய அழுத்தமே. காற்றின் அழுத்தம்
அட்டையை மேலே தள்ளுகிறது. நீர் அட்டைக்கு செலுத்தும் அழுத்தம் விட காற்றின் அழுத்தம் அதிகம். எனவே அட்டை கீழே விழாது.கணினி சூழ் உலகு

புதிய பாடப்புத்தகத்தில் ஆங்கிலப் பாடம் கற்பிக்க சிரமமா? கவலை வேண்டாம்... புத்தகத்தில் உள்ள அத்துணை புதிய வார்த்தைகளும், அதற்கான பொருள் - synonyms, எதிர்சொல் -Antonyms, simple conversations, puzzles, questions (more than 1000 questions), verb forms, compound words, rhyming words, prefix suffix என தொடக்கநிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க தேவையான அத்துணை கட்டகங்களும் உள்ள தளம்தான் இது. ஒய்வுபெற்ற வங்கி அதிகாரி திரு. சோமசுந்தரம் என்பவரால் தயாரிக்கப்பட்ட இவ்வளவு தொகுப்புகளும் இந்த தளத்தில் உள்ளன. நிச்சயமாக இது ஆசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

https://learnandteachindia.home.blog/

இன்றைய செய்திகள்

04.07.2019

 * சிலி மற்றும் அர்ஜென்டினாவில் இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் தோன்றியது.

* தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கண்ணப்பன்  பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*  சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 13-ம் தேதி மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற உள்ளன.

* விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் முன்னணி வீரர் பெடரர் வெற்றி .

* உலக்கோப்பைக் கிரிக்கெட் : நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

Today's Headlines

🌸 The first full solar eclipse of this year appeared in Chile and Argentina.

 🌸 Rameshwara Murugan, Director of School Education in Tamil Nadu has been transferred as Director of Matriculation Schools.  Kannappan, who was the Director of Matriculation Schools, has been appointed as the Director of School Education.

 🌸 People's courts to be held on July 13 in Chennai and other district capitals.

 🌸 Wimbledon tennis: Federer won the first round.

 🌸World Cup Cricket: England won by 119 runs against Newzealand and entered into  the semifinals.

Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments