Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளைநமதே - கற்றுக்கொள்வதற்கான அரங்கம் அல்ல இது - நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வதற்கான அரங்கு..



*நாளைநமதே*

கனவுபோலத் தொடங்கிய *கல்வியாளர்கள்சங்கமம்* இன்று பல்வேறு தடங்களைப் பதித்து வருகின்றது. *நாளைநமதே*
அவற்றுள் மிகமுக்கியமான தடம்.
ஆம்.

*ஆசிரியர்களுக்கான ஓர் கருத்தரங்கை ஆசிரியர்களே முன்னெடுக்கும் வாய்ப்பை ஓர் ஊடகம் நமக்கு வழங்கிச் சிறப்பிக்கிறது* எனச் சொன்னால் அதைவிட வேறென்ன சிறப்பு நமக்கு வேண்டும்.

*மாண்புமிகுமாணவனே* என்னும் மாணவர்களுக்கான நிகழ்வை புதிய தலைமுறையோடு இணைந்து நாம் நடத்திவரும் சூழலில்,

ஆசிரியர்களுக்கான அரங்கையும் நம்முடனே இணைந்து *புதியதலைமுறை* தொடங்கி இருக்கின்றது என்பது உணர்வுப்பூர்வமான பெருமை.

நாளைநமதே
கற்றுக்கொள்வதற்கான அரங்கம் அல்ல இது - நம்மை நாமே
புதுப்பித்துக் கொள்வதற்கான அரங்கு..

இவை அத்தனையும்
*கல்விசமூகத்திற்கானது* என்னும் பயணம்  நோக்கிய முன்னேற்றமே!

*திரு.நந்தகுமார்IRS அவர்கள்*
கூடுதல் ஆணையர்
வருமானவரிதத்துறை

கற்றுக்கொண்டே,
கற்பித்துக்கொண்டும் இருக்கும் ஆசிரியர்கள், கற்பித்தல் என்பதை உணர்ந்து,உணர்ப்பூர்வமாக கற்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது பேரழகு..

*திரு.உதயசூரியன் அவர்கள்*
ஆசிரியர்
புதியதலைமுறை வாரஇதழ்

ஆசிரியர்களின் ஆசிகளால் உயர்ந்தவன்
ஆசிரியர்களின் முன்னால் தானும் ஓர் ஆசிரியராக இருந்தாலும்கூட, இன்று என்னை மாணவனாகவே உணர்கிறேன்
எனச் சொல்லியது நெகிழ்வு..






*முனைவர்ஆசிர்ஜூலியஸ்* அவர்கள்
உதவிப்பேராசிரியர்
SCERT- சென்னை

ஆசிரியர்களை ஆசிரியர்கள் பாராட்டத் தொடங்கிவிட்டாலே போதும்,
மற்றவை எல்லாம் தானே நடக்கும்
எனச் சொன்னபொழுது அரங்கம்
ஆமோதித்தது அர்த்தமுள்ளதாக இருந்தது..

*முனைவர்பாலுசாமி அவர்கள்*
முதல்வர்
KPR கலை அறிவியல் கல்லூரி

தமிழகத்தில் முதன்முதலாக தொடங்கும் நாளைநமதே நிகழ்வு எங்கள் KPR கல்லூரியில் தொடங்குவது எங்கள் கல்லூதிக்குப் பெருமை என ஆசிரியர்களைக் கொண்டாடியது பெருமை..

*கேள்விகளுக்கு பதில் சொல்லால் அல்ல*
*செயலால் சொல்லிப் பழகுவோம்.*

பயணம் தொடரும்....
*நாளைநமதே*




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive