NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் அறிவிக்க - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் - தமிழக முதல்வரிடம் கோரிக்கை..

சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் அறிவிக்க - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் - தமிழக முதல்வரிடம் கோரிக்கை...

45 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது...! மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்கலாம்.

தமிழக அரசுப்பள்ளிகளில் 1 முதல் +2 வகுப்பு வரை பயிலும் 2 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் பெற்று தரும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சிறப்பு பயிற்றுநர்கள் 1998 முதல் தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்...

1998 முதல் 2002 வரை மாவட்ட தொடக்க கல்வி திட்டம் (DPEP) பணிபுரிந்து வந்தனர்..2002 முதல் 2012 மே மாதம் வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) வாயிலாக தொண்டு (NGO) நிருவனங்களின் மூலமாக பணிபுரிந்து வந்தனர். தற்போது ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் (Samagra Shiksha) பணிபுரிகின்றனர்.

NGO-க்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த காரணமாக 2012 ஜீன் மாதம் தொண்டு நிறுவனங்களை அடியோடு இரத்து செய்துவிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக அரசு பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சிறப்பு பயிற்றுநர்களை வட்டார வள மையங்களில் (பி.ஆர்.சி) பணியமர்த்தியது..

ஆனால் எவ்வித பணியேப்பு ஆணையும் வழங்கப்படவில்லை..

MHRD வழிக்காட்டுதல் படி 2015 ஆண்டு ஜீன் மாதம் மாற்றுத்திறன் மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்றுநர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆனால் எவ்வித பணி மாறுதல் ஆணையும் வழங்கப்படவில்லை..

இவ்வாறு 21 ஆண்டுகள் சேவைப்பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு பணிஆணை வழங்கப்படாத காரணத்தால் பல்வேறு அடிப்படை பணிச்சலுகைகள் மறுக்கப் படுகிறது.

தொடர் தற்செயல் விடுப்பு இல்லை
மத விடுப்பு இல்லை
தீபாவளி போனஸ் இல்லை
பொங்கல் போனஸ் இல்லை
ஊதிய உயர்வு இல்லை
இ.பி.எப் பிடித்தம் இல்லை
மருத்துவ காப்பீடு இல்லை
பணிவரண்முறை இல்லை
வங்கி கணக்கில் ஊதியம் இல்லை.

பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் என 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவையாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் கோரிக்கை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர், ஆளுநர், கல்வி துறை அமைச்சர், பள்ளி கல்வித் துறை செயலாளர் , மாநில திட்ட இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை செயலாளர் , நிதித்துறை அதிகாரிகள் மாநில / மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்..

தமிழ்நாட்டில் 413 வட்டார வள மையங்களில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்கள் பள்ளி ஆயத்த மைய பராமரிப்பாளர் உதவியாளர் ஆகியோர் களை உள்ளடங்கிய ஒரே மாநில சங்கம் TN_SS_SEADAS திருச்சி சேதுராமனின் தலைமையின் ஆலோசனையின் பேரில் விழுப்புரம் பாபுவின் வழிக்காட்டுதல் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி அருண் கடலூர் கணபதி மாநில ஒருங்கிணைப்பில் மாநில சங்கத்தை விருதுநகர் காணிராஜா திருவாரூர் வைரவேலன் ஈரோடு ராஜேஷ் சென்னை டோன்போஸ்கோ கோவை மனோஜ்மார்ட்டின் வேலூர் சிவராமன் ஆகியோர் கண்காணித்தல் திட்டம் வகுத்தல் செயல்படுத்தல் பணியை ஒற்றுமையோடு செய்திட சென்னை மாலினி பொருளாதாரத்தை செவ்வனே நிர்வகித்து கூட்டு குடும்பமாக  மாநில சங்கத்தை உயர் அதிகாரிகளே வியக்கும் வண்ணம் பாராட்டும் வகையில் மாவட்டங்களை ஒருங்கிணைத்து பொறுப்புகளை பிரித்து கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் மாநில சங்கம் மூலமாக 23.01.2019 முதல் 30.01.2019 வரை டி.பி.ஐ வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கத்தின் தலைவர் தீபக் , அரசியல் கட்சி தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், தொல்.திருமாவளவன் , சீமான் , ஜி.கே.வாசன் ,ஏ.கே.மூர்த்தி, பழ.நெடுமாறன், முத்தரசன், பால கிருஷ்ணன் , மல்லை சத்யா, எல்.கே.சுதீஷ் , வெற்றிவேல் , ஆகியோர் நேரில் சந்தித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்...

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, உமிழ்நீர் கட்டுப்படுத்தும் பயிற்சி, கற்றல் குறைபாடு களைய தனிக்கவனம், அதீத துறுதுறு செயல்பாடுகள்  கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகிய போற்றுதலுக்குரிய சிறப்பான பணி காரணமாக பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள்  பொதுமக்கள் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி  சமூக வலைத்தளங்கள் மற்றும் கல்வி தொடர்பான அனைத்து ஊடகங்களில் ஆதரவு குரல் கொடுத்தனர்..

பிற மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மாத ஊதியம் டெல்லியில் 41750 , ஆந்திராவில் 21500 , மகாராஸ்டிராவில் 30759 , கர்நாடகாவில் 20000 , புதுச்சேரியில் 21000 , கேரளாவில் 27000 , ஹாரியானாவில் 42409 , ஆனால் தமிழ்நாட்டில் 14000 மட்டுமே வழங்கப்படுகிறது என்பது வருத்தத்திற்கும் வேதனைக்குரியது..

2015
2016
2017
2018
2019 என ஐந்து ஆண்டுகளாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை.

விலைவாசி உயர்வு,வீடு வாடகை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஊதிய உயர்வு வழங்க வழிவகைகளை மேற்கொள்ளவும்.

நாடு முழுவதும் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) என்ற பெயரில் ஒரே மாதிரியான செயல்பாடுகள் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஊதியம் வழங்குவதில் வேறுபாடு உள்ளதென்பது பாரபட்சமான செயல்பாடுகள் சட்டவிரோத நடவடிக்கையாக உள்ளது.

ஆந்திரா கேரளா டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களை மாநில அரசு பணிநிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை தமிழகஅரசு பணிநிரந்தரம் செய்ய 79 கோடி தேவையென நிதித்துறை மூலமாக கணக்கிடப்பட்டுள்ளது..

இதில் மத்திய அரசு ( MHRD ) மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஆண்டுத்தோறும் 12 மாதங்களுக்கு 34 கோடி நிதியினை வழங்குகிறது.. 

எனவே 1761 சிறப்பு பயிற்றுநர்களை தமிழக அரசுப் பள்ளிகளில் பணி நிரந்தரம் செய்திடல் வேண்டும்.

கல்வித்துறை திட்டத்தில் (Samagra Shiksha) சிறப்பு பயிற்றுநர்கள் பணிகள்:-

கணக்கெடுப்பு
பள்ளி சேர்க்கை
சிறப்பு பள்ளி சேர்க்கை
வீடுசார்ந்த பயிற்சி
சிறப்பு மருத்துவ முகாம்கள்
உதவி உபகரணங்கள்
அறுவை சிகிச்சை
பராமரிப்பு உதவி தொகை ₹.2500
மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகை₹.1000
கல்வி உதவித்தொகை ₹.1000/₹.3000/₹.4000/₹.6000
பெற்றோர்களுக்கு பயிற்சி
ஆசிரியர்களுக்கு பயிற்சி
முன்பு 6-14 வயது மட்டுமே ஆனால் தற்போது 0-18 வயது கவனிக்க பயிற்சி வழங்க வேண்டும்.
முன்பு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே
ஆனால் தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்க வேண்டும்.
போக்குவரத்து பாதுகாவலர் உதவித்தொகை ₹.600
பெண்கல்வி ஊக்கத்தொகை ₹.200
வீடுசார்ந்த HBT ஊக்கத்தொகை ₹.200
பேச்சு பயிற்சி
அன்றாட வாழ்வியல் திறன் பயிற்சி (அதாவது கழிவறை பயன்படுத்த , உணவு உண்ண , சட்டை அணிய, தலை வார,)
டேப்லெட்களை பயன்படுத்தி பயிற்சி
கணினி மூலமாக பயிற்சி
தொடுதிறன் மூலமாக பயிற்சி
ஒலிக்கேட்டல் பயிற்சி
பிரெய்லி முறை
புலனுறுப்புகளை மேம்படுத்த பயிற்சி
மொபைல் வேன் மூலம் சிறப்பு பயிற்சி
அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி
தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி 
இன்னும் பல..

இவ்வாறு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பாடுகள் உள்ள பணியில் கஷ்டம் இருப்பினும் மனநிறைவோடு ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கருத்தில் கொள்ளவும்.பணி நிரந்தரம் தாமதமாகும் பட்சத்தில் விரைவில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்கினாலே போதுமானது.

பல்வேறு திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடிகளை நிதிஒதுக்கீடு செய்யும் தமிழக அரசு கடந்த 21 ஆண்டுகளாக (1998 to 2019) லட்சக்கணக்கான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கருணையோடு, தொண்டுள்ளத்தோடு சொற்ப ஊதியத்தில் எவ்வித அடிப்படை பணிச்சலுகையின்றி பணித்தளத்தில் உரிய அங்கீகாரம் கூட இல்லாமல் தொகுப்பூதியத்தில் சேவை மனப்பான்மை உடன் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் உதவித்தொகை ₹.2500 ஆக உயர்வு தசை சிதைவு பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிட்டு மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றியமைக்கு மாநில சங்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவைப்பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்கள் வாழ்வாதாரம் கண்ணோக்கி கருணையோடு காத்திடுமாறும் 3000 குடும்பங்கள் தங்களது சமூகத்தை நோக்கி இருகரம் கூப்பி மன்றாடி வேண்டுகோள் விடுக்கின்றோம்.நன்றி..!

கிருஷ்ணகிரியில் மாண்புமிகு கல்விதுறை அமைச்சர் திரு.கே.செங்கோட்டையன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் ஆகியோருடன் பேசி ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்தார்.

தமிழக அரசு மற்றும் துணை முதல்வர் கல்வித்துறை அமைச்சர் உயர் அதிகாரிகள் ஆகியோர் எங்களது  21 ஆண்டு பணிக்காலத்தை கனிவோடும் கருணையோடும்  பரிசீலித்து நடைபெற்று வரும் (ஜூலை 2019) சட்டமன்ற கூட்டத்தொடரில்110 விதிகளின்படி புரட்சி தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழக முதல்வர்  அவர்கள் அறிவிப்பாணை வெளியிட்டு சிறப்பு பயிற்றுநர்களுக்கு 45கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து பணிநிரந்தரமாக்கி வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என்று தமிழ் நாடு - ஒருங்கிணைந்த கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive