Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோவையில் மாணவிக்கு கொரோனா பாதிப்பு!

ஸ்பெயினில் இருந்துவந்தகோவை மாணவிக்கு கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது . இதை அடுத்து , தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது .

ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோ தனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி . விஜயபாஸ்கர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் .

 இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது : கோயம் புத்தூரை சேர்ந்த 25 வயதுமாணவி , ஸ்பெயின் நாட்டில் இருந்து கடந்த 13 - ம் தேதி கோவை வந்தார் . இந்த சூழலில் , ஸ்பெயினில் அவரு டன் இருந்த தோழிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது .

 இத்தகவலை அறிந்த கோவை மாணவி கடந்த 18 - ம் தேதி பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு வந்தார் . அவரை மருத்துவமனையில் அனுமதித்த டாக்டர்கள் , அவரது ரத்த மாதிரிகளை எடுத்து 19 - ம் தேதிபரிசோதனைக்கு அனுப்பினர் . பரிசோதனை முடிவில் , அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப் பது உறுதி செய்யப்பட்டது .

 இதை யடுத்து , அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் , உறவினர் கள் , நண்பர்கள் அனைவரையும் கண்காணித்து வருகிறோம் . அவர் களுக்கு பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது என்றனர் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive