Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!"

‘துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கா பாரேன்…’ என்று சொல்வதற்கேற்ப, அந்தக் காலத்தில் பார்க்கும் அத்தனை பெண்களுமே மாசு மரு இல்லாத பொலிவுடன் பளிச்சென இருப்பார்கள். தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல் என குளத்தில் முங்கிக் குளிக்கும் சுகமே அலாதிதான். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. ‘தலைவலி வரும்… ஜலதோஷம் பிடிக்கும்… முகத்தில் எண்ணெய் வடியும்… தலைமுடியை அலசுவதே கஷ்டம்…” என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.


உடலுக்கும் மனதுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணெய் குளியலின் அவசியத்தை எடுத்துச் சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.

‘தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ‘தின ஒழுக்கம்’ என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.


மாசுக்களால் பாதிப்பு

சுற்றுச்சூழல் மாசு காரணமாக, வெளியில் இருந்து வந்து குவியும் தூசு தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை. சோப்பு போட்டுக் குளிப்பது வெளிப்புற அழுக்கைப் போக்குமே தவிர, சருமத்தின் உள் ஊடுருவிய அழுக்கு, தூசியைப் போக்காது. அழுக்கு அப்படியே படிந்து, அழகைக் குலைத்து, சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த வகை தூசுக்கள் கண்ணுக்குத் தெரியாது.  வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், சருமத்தைப் பொலிவுடன் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். ‘சனி நீராடிய’ அந்தக் காலத்தில் சரும நோய் என்பதே கிட்ட நெருங்காமல் இருந்தது. ஆனால், இன்றோ, தீபாவளிப் பண்டிகை நாளில்கூட எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு, ஷாம்பூ போடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லது அல்ல. ஆரோக்கியத்தைப் பெருமளவு பாதிக்கும். தூசு, அதிக உஷ்ணம் இவற்றால் உடல் பாதிக்காமல் இருக்க, தினமுமேகூட, உடலிலும் தலையிலும் எண்ணெய் தேய்த்து, தலைக்குக் குளிப்பது அவசியமாகிவிட்டது.

ஏராள நன்மைகள்

உடல் உறுப்புகள் பாதிக்கும். தோல், கல்லீரல், எலும்பை இணைக்கும் பகுதிகள், தசைகள், தோலில் உள்ள திசுக்கள் பாதிப்புக்கு உள்ளாகும். ‘இன்சோம்னியா மஸ்குலர் பெயின்’ என்ற தூக்கமின்மை பாதிப்பு ஏற்படும். விரைவிலேயே வயோதிகத் தோற்றத்தை தரும். ரத்த சம்பந்தமான பிரச்னைகள் வரும். மேலும், அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கவலை, எரிச்சல், சோர்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் தலைதூக்கும். உடலில் உஷ்ணம், பித்தம் அதிகரிக்கும். பொதுவாக, உடலினுள் இருக்கும் சூடுதான் நோயை அதிகரிக்கச் செய்கிறது. உள்ளுக்குள் உஷ்ணம் அதிகமாகும்போது வைரல் இன்ஃபெக்ஷன் ஏற்படும். காமாலை, அல்சர், வைரல் நோய்கள், வயிற்றுவலி, கண் நோய்கள் என வரிசைகட்டி வரும்.

மனம் லேசாகும்

சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும்.  மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும். அதனால்தான், எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று, உடல் சூடாகவே இருக்கும். இதை, ‘உடல் சூட்டைக் கிளப்பிவிட்டுட்டுச்சு…’ என்று பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருந்துவிடுவார்கள். உடலின் உள் உறுப்புகள் குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.

வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். வாரம் இருமுறை குளிப்பதன் மூலம் சருமம் நல்ல பொலிவைப் பெறும். மன அமைதி கிடைக்கும். கண்ணும் உடலும் குளிர்ச்சியடையும். பேன், பொடுகுத் தொல்லை இருக்காது. முடி நன்றாக வளரும். முன்னந்தலையில் வழுக்கை விழாது. எப்போதும் ஒருவிதப் புத்துணர்ச்சி இருக்கும். சரும வறட்சி நீங்கும். உடல் எடையைக் குறைப்பதற்கும் எண்ணெய்க் குளியல் உகந்தது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive