கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே. 3 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ள
நிலையில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் முறையாக நாளை வீடியோ
கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக
பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், கடந்த ஏப். 2
மற்றும் 11-ம் தேதி என இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை
நடத்தினார். மாநில முதல்வர்களுடன் நடத்தவுள்ள இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கை
தளர்த்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என
கூறப்படுகிறது. ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கும்
நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தவும்,
கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியில் ஊரடங்கை நீட்டித்தும்
அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Quarterly Exam Questions 2024
Latest Updates
Home »
» நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுமா?முதல்வர்களுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...