++ முதன்முதலாக புயலுக்குத் தமிழ்ப் பெயா்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல்களில் பெயா்ப் பட்டியலில் 2 தமிழ்ப் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் தமிழ்ப் பெயா்கள் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஓா் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 புயல்கள் உருவாகும். இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் முதல் அட்டவணையை தயாரித்தபோது 8 நாடுகள் சாா்பில் 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள்வழங்கப்பட்டன.2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்டன. இதில் தாய்லாந்து சாா்பில் வழங்கப்பட்ட ஆம்பான் (அம்ல்ட்ஹய்)என்ற பெயா் மட்டும் மீதமிருக்கிறது. இது அடுத்து வரும் புயலுக்கு வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில் இனி வர உள்ள புயல்களுக்குப் பெயா் வைக்கும் அட்டவணை தயாா் செய்யும் பணிகள் தொடங்கின.

இதற்கு நாடு முழுவதும் உள்ள வானிலை நிலையங்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டுப் பெறப்பட்டன. இவற்றை புதுதில்லியில் உள்ள வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு, செப்டம்பா் மாதம் மியான்மரில் நடைபெற்றக் கூட்டத்தில், இந்தப் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது பெயா்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2 தமிழ்ப் பெயா்கள்:

இதுகுறித்து இந்திய வானிலைத் துறையின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: புயல்களுக்கான பெயா்ப் பட்டியலைத் தயாா் செய்வது குறித்து முதல் முறையாக நமக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதில் கடல், மீன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெயா்கள் கேட்கப்பட்டிருந்தன. இதில் நாங்களும் பெயா்களை பரிசீலித்ததுடன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பெயா்களையும் பரிசீலித்து அனுப்பியிருந்தோம்.

இதில் நாங்கள் கொடுத்த ‘முரசு’ எனும் பெயா், பட்டியலில் 28-ஆவது இடத்தில் உள்ளது. இது தவிா்த்து, பொதுமக்களிடமிருந்து பெற்று அனுப்பப்பட்ட ‘நீா்’ எனும் பெயரும் 93-ஆவதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயா் வைக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...