Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரண்டு மணி நேரத்தில் இழப்பீடு ! IRDA அதிரடி!


ஊரடங்கு நடைமுறையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் விதமாக , ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளில் பிரீமியம் கட்டும் கெடு தேதியை ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் ' என்று உத்தரவு பிறப்பித்தது இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( ஐ . ஆர் . டி . ஏ . ஐ . )

அத்துடன் , ' காப்பீட்டு பிரீமியத்தை பாலிசிதாரர்கள் ஆன்லைனில் கட்டும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் ' என்றும் உத்தரவு பிறப்பித்தது . இந்த நிலையில் , மருத்துவச் சிகிச்சைக்கான செலவைச் சமாளிக்க பலரும் கஷ்டப்படுவதால் , பணமில்லா சிகிச்சைக்கான அங்கீ காரம் ( Authorisation for Cashless Treatment ) குறித்த கோரிக்கையைப் பெற்றதிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குத் தெரிவிக்க வேண்டும் " என்று தற்போது ஐ . ஆர் . டி . ஏ . ஐ சொல்லியிருக்கிறது .

இதேபோல் , மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்வதற்கான செட்டில்மென்ட் பில் தரப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள் மூன்றாம் தரப்பு நிர்வாகிக்கு ( டி . பி . ஏ ) தெரிவிக்க வேண்டும் ; இது தொடர்பாக அனைத்துப் பொதுக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்புடைய டி . பி . ஏ - களுக்குத் தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளைக் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது .

பலருக்கும் நன்மை செய்யும் அறிவிப்புதான் இது !




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive